3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 24, 2022

Comments:0

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! - Associate Director of School Education processes depending on the transfer of ministry staff who have been in the same office for more than 3 years!

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பொதுப்பணி / அமைச்சுப்பணி அனைத்து வகைப் பணியாளர்களுக்கான மாறுதல் - 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் / பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல் வழங்குதல் - நெறிமுறைகள் - சார்பு.

பார்வை:

1. அரசாணை நிலை எண் 10 பணியாளர் மற்றும் நிர்வாக சீரமைப்புத் துறை, நாள்: 07.01.1994

2. அரசாணை எண்.101, ப.க.(வ.செ.) பள்ளிக் கல்வித்துறை, நாள்.18.05.2018

3. அரசாணை எண்.151, பள்ளிக்கல்வி (SE1(1), துறை, நாள்.09.09.2022

4. சென்னை –6, தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் பணியாளர் தொகுதி) செயல்முறைகள், ந.க.எண்.24689/அ4/இ1/2019, நாள்.12.08.2022.

பார்வை (2) மற்றும் (3) இல்காணும் அரசாணையின்படி கல்வித்துறையில் பல்வேறு அலுவலகங்கள் நிர்வாக நலனை முன்னிட்டு சீரமைக்கப்பட்டும், புதிய அலுவலகங்கள் உருவாக்கம் செய்யப்பட்டும் ஆணை வழங்கப்பட்டது.

இந்நிலையில், பார்வை (1)இல் காணும் அரசாணையின்படி, நிர்வாகம் திறம்பட செயல்படும் பொருட்டு, பணியாளர்கள் மூன்று வருடத்திற்கு மேல் ஒரே அலுவலகத்தில்/ பணியிடத்தில் பணிபுரியும்பட்சத்தில் அவர்களை மாறுதல் செய்திட கீழ்க்கண்ட நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் புதிய உத்வேகத்துடன் செயல்படத் தக்கவகையிலும், அனைத்து அலுவலகங்களும் எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையிலும் 01.06.2022 அன்றைய நிலையில், மூன்று ஆண்டுகட்கு மேல் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோர்களுக்கு இணைப்பில் கண்டுள்ள பட்டியலின்படி மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே கலந்தாய்வு நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. புதிய அலுவலகங்களில் நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு பணியிடம் அனுமதித்து, பார்வை (3) இல் கண்டவாறு அரசாணை வெளியிடப்பட்டதன் அடிப்படையில் அப்பணியிடங்களைக் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். மேலும் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றி கலந்தாய்வினை செவ்வனே செய்து முடிக்க அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்டத்திற்குள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்:

1. மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு, மாறுதல் பெற அறிவுறுத்த வேண்டும்.

2. 01.06.2022 அன்றைய நிலையில் பிற அலுவலகங்களில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அமைச்சு / பொதுப் பணியாளர்களைத் தங்கள் மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடத்தி பிற அலுவலகங்களுக்கு மாறுதல் வழங்கப்பட வேண்டும்.

3. அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் பிற பணியாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

4. கோயம்புத்தூர் மற்றும் மதுரை மண்டல கணக்கு (தணிக்கை) அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் மாறுதல் கலந்தாய்வில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

5. அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் கண்காணிப்பாளர்களும் தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொண்டு புதிய பணியிடத்தை தேர்வு செய்ய அறிவுறுத்த வேண்டும்.

6. பட்டியலில் உள்ளபடி மாறுதல் கலந்தாய்வின்போது கலந்துகொள்ள வேண்டிய பணியாளர்கள், கலந்து கொள்ளாத நிலையில் அப்பணியாளர்களுக்கு நிருவாக மாறுதல் அளிக்கப்படும்.

7. தங்கள் வருவாய் மாவட்டத்திற்குள் மாறுதல் செய்யும்போது மாவட்டத்திற்குள் பணியிடம் இல்லாத நிலையிலோ, பணியாளர் வேறு மாவட்டத்தைக் கோரும் போதோ, அப்பணியாளர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள, அவர்தம் பட்டியலை ஆணையரகத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும், மூன்றாண்டுகளுக்கு மேற்பட்டவர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதலில் செல்வதற்கான வாய்ப்பு இல்லாதபட்சத்தில் அப்பணியாளர்களது பட்டியலை பள்ளிக்கல்வி ஆணையரகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

8. பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு பார்வை (4)இல் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

9. மேற்கண்ட மாறுதல் அனைத்து மாவட்டங்களிலும் பட்டியலில் குறிப்பிடப்பட்ட நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். சென்னை மாவட்டத்தில் உள்ள பணியாளர்கள் மற்றும் பள்ளிக்கல்வி வளாக (DPI) அலுவலகப் பணியாளர்கள் அனைவரையும் ஒரே அலகாக கருதி ஆணையரகத்தில் இணைப்பில் கண்ட பட்டியலில் குறிப்பிட்டவாறு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.

10. ஒரே பணியிடத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிமாறுதல் கோரும்நிலையில் பணியாளரின் பதவியில் சேர்ந்த நாளினை (Cadre seniority and not the station seniority)முன்னுரிமையாக கருதப்பட வேண்டும்.

11. மூன்றாண்டு பணிமுடித்த பணியாளர்கள் கட்டாய மாறுதலுக்குத் தகுதியுடையவராய் இருந்த போதிலும் சில பணியாளர்கள் எதிர்வரும் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் அப்பணியாளர்களுக்கு இடம்பெற்றிருப்பாராயின் மூன்றாண்டுகளுக்கான மாறுதல் அளிக்கத் தேவையில்லை.

மாவட்ட அளவில் அனைத்து அமைச்சு / பொதுப்பணியிடங்களுக்கும் (மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் / முறையான கண்காணிப்பாளர்கள் / பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள் / உதவியாளர்கள் / இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர்கள் வரை) இணைப்பில் கண்ட பட்டியல்படி மாறுதல் கலந்தாய்வு நடத்திவிட்டு. உடனுக்குடன் தங்கள் மாவட்ட அளவில் உள்ள காலிப்பணியிட விவரங்களை (Resultant Vacancy) பதவி வாரியாக தனித்தனியாகப் பட்டியலிட்டு அவ்வப்போது ஆணையரகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட விதிமுறைகளை தவறாது பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமின்றி செவ்வனே செயல்படுத்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தலாகிறது.

இணைப்பு:- பட்டியல் (அட்டவனை) CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews