ரூ.1 லட்சம் சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 05.09.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، سبتمبر 03، 2022

Comments:0

ரூ.1 லட்சம் சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 05.09.2022

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தன்னாட்சி பெற்ற அமைப்பான ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா எனப்படும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் பிசியோதெரபிஸ்ட், ஊட்டச்சத்து நிபுணர் உள்பட பல்வேறு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள 138 உயர் செயல்திறன் ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலி பணியிடங்கள்: 138

பணி மற்றும் விவரங்கள் வருமாறு: 

பணி: High Performance Analyst 

பிரிவு வாரியான காலியிடங்கள்:

1. Physiotherapists - 42

2. Strength & Conditioning Experts - 42

3. Physiologists - 13

4. Psychologists - 13

5. Biomechanics - 13

6. Nutritionists - 13

7. Biochemists - 2

சம்பளம்: மாதம் ரூ.1,05,000

தகுதி: பணி சம்மந்தப்பட்ட பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி அனுபவம்: வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள துறைகளில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது) முதுநிலை பட்டம் பெற்றிருப்பவர்கள் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் (பி.எச்டி) வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://sportsauthorityofindia.gov.in/saijobs என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 05.09.2022 அன்று மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். 

மேலும் விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة