WhatsAppல் உள்ள பிரைவசி வசதிகள் என்னென்ன?? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 03, 2022

Comments:0

WhatsAppல் உள்ள பிரைவசி வசதிகள் என்னென்ன?? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

உங்கள் வாட்ஸ்ஆப்பில் டிஸ்பிளே பிக்ஸர் (display picture), ஸ்டேடஸ் (status) Last Seen (லாஸ்ட் சீன்) அம்சங்களை தேவைகேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம். அவை எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

உலகளவில் வாட்ஸ்ஆப் செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். இதை பயன்படுத்துவது எளிதாக இருப்பதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தகவல்களை எளிதில் பரிமாறிக் கொள்ளவும் முடிகிறது. இந்த நிலையில், வாட்ஸ்ஆப்பில் பிரைவசி வசதிகள் உள்ளன. அதாவது DP என சொல்லப்படும் டிஸ்பிளே பிக்ஸர், நீங்கள் வைக்கும் ஸ்டேடஸ், Last Seen ஆகியவற்றை நீங்களே தேவைகேற்ப மாற்றியமைத்துக் கொள்ள முடியும். யார் உங்கள் Last Seen, DP பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

உங்கள் வாட்ஸ்அப் பிரைவசி வசதிகள்

வாட்ஸ்அப் பிரைவசி வசதிகள் DP, status, Last Seen ஆகியவற்றை தேவைகேற்ப எளிதாக மாற்றலாம். அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் இந்த வசதி பெரும்பாலும் ஒரே மாதிரி தான் செயல்படுகிறது.

முதலில், வாட்ஸ்அப் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்.

அதில், ‘அக்கவுண்ட் ’(Account)ஆப்ஷனிற்கு சென்று, பிரைவசி மெனுவை கிளிக் செய்ய வேண்டும்.

பிரைவசி மெனுவில் Profile photo,Last Seen,About,Status அம்சங்கள் மாற்றியமைக்க கொடுக்கப்பட்டிருக்கும். வாட்ஸ்அப் பிரைவசி செட்டிங்ஸ்

அதில் Last Seen,Profile photo ‘Everyone’ எனக் கொடுத்தால் எல்லோருக்கும் காண்பிக்கப்படும். ‘My contacts’ எனக் கொடுத்தால் உங்கள் contactsஇல் இருப்பவர்களுக்கு மட்டும் காண்பிக்கப்படும்.

‘My contacts except’ எனக் குறிப்பிட்டால் நீங்கள் செலக்ட் செய்பவர்கள் மட்டும் Last Seen,Profile photo பார்க்க முடியும். மற்றவர்களுக்கு காண்பிக்கப்படாது. ‘Nobody’ என கொடுத்தால் யாருக்கும் காண்பிக்கப்படாது.

Status பிரைவசியிலும் இதேபோன்று வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனம் புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை மகிழ்வித்து வருகிறது. அதேபோல் வாட்ஸ்அப் தகவல், தரவுகள் பாதுகாப்பிலும் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews