வருமான வரி ரீஃபண்ட் வேண்டுமா.? கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 5 வருமான வரி விதிகள்.! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 08, 2022

Comments:0

வருமான வரி ரீஃபண்ட் வேண்டுமா.? கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 5 வருமான வரி விதிகள்.!

ITR Refund | வரி செலுத்துவோர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தவறவிட்டால், அபராதத் தொகையுடன் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்

2022 - 2023ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்துவடைந்து விட்டது. ஜூலை 31 அல்லது அதற்கு முன் ஐடி வருமானத்தைத் தாக்கல் செய்தவர்கள் கூடுதலாக செலுத்திய வரியை மத்திய நேரடி வரி அமைப்பு மூலம் திரும்ப பெறுவார்கள். இருப்பினும், கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யத் தவறியவர்கள், டிசம்பர் 31, 2022க்குள் ஐடி ரிட்டனைத் தாக்கல் செய்வதன் மூலம் தங்களுக்கான கூடுதல் வரித்தொகையை திரும்ப பெறலாம்.

வரி செலுத்துவோர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தவறவிட்டால், அபராதத் தொகையுடன் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். ஐடிஆர் ரீஃபண்ட் என்பது வருமானம் இல்லை என்றாலும், அந்த ரீஃபண்ட் தொகைக்கான வட்டி வருமானமாக கருதப்படுகிறது. எனவே அந்த தொகைக்கான வருமான வரியானது அடுத்த ஆண்டுக்கான கணக்கில் சேர்க்கப்படுகிறது. வருமான வரி ரீஃபண்ட் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய விதிமுறைகளை பற்றி இங்கே பார்க்கலாம்...

தகுதி:

வருமான வரித் தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் அல்லது அதற்கு முன்னதாக வருமான வரித் தாக்கல் செய்தவர்கள் வருமான வரி ரீஃபண்ட் பெற தகுதியானவர்கள். நீங்கள் ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருந்தால், ஏப்ரல் 1ம் தேதி வருமான வரி ரீஃபண்ட் கிடைக்கும்.

ஐடிஆர் ரீஃபண்ட் மீதான வட்டி:

ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்திருந்தால், ஏப்ரல் 1ம் தேதிக்கு வருமான வரி ரீஃபண்ட் தொகைக்கான வட்டித் தொகை உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். வருமான வரி ரீஃபண்ட் தொகைக்கு வரி இல்லை என்றாலும், ரீஃபண்ட் தொகைக்கான வட்டியானது வரிக்குட்பட்டது.

ரீஃபண்ட் வட்டி விகிதம்:

மத்திய அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தவர்களுக்கு ஐடிஆர் ரீஃபண்ட் தொகையில் 0.50 சதவீத மாதாந்திர வட்டி கிடைக்கும். வரிவிதிப்பு விதிகள்:

தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கிற்கான ரீ ஃபண்ட் தொகை என்பது, வரி செலுத்துவோர் ஏற்கனவே தெரிவித்த வருமானமாகும். எனவே தான் ஐடிஆர் ரீஃபண்ட் தொகைக்கு வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால் ஐடிஆர் ரீஃபண்ட் தொகை மூலமாக ஈட்டப்படும் வட்டியானது, தனிநபரின் நிகர ஆண்டு வருமானமாக கணக்கிடப்படுவதால் அதற்கு வருமான வரி விதிக்கப்படுகிறது.

வட்டி கணக்கீடு:

வருமான வரிச் சட்டம் பிரிவு 234D வருமான வரி ரீஃபண்ட் தொகை கணக்கிடப்படுகிறது. ஐடிஆர் ரீஃபண்ட் மீதான வட்டியைக் கணக்கிடும் போது, ​​மாதத்தின் எந்தப் பகுதியும் ஒரு மாதமாக கருதப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, 3 மாதங்கள் மற்றும் 10 நாட்களுக்கு ரூ.8,489 வட்டியைக் கணக்கிட வேண்டும் என வைத்துக்கொள்வோம். அப்போது 100 ஆக முழுமை பெறாத தொகையானது கணக்கில் இருந்து கழிக்கப்படும். அதாவது 8,489 ரூபாயில் உள்ள ரூ.89 கழிக்கப்பட்டு, மீதமுள்ள 8.400 ரூபாய்க்கான வட்டித்தொகை மட்டுமே கணக்கிடப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews