விரிவுரையாளர் பணிக்கு தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சி கட்டாயம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أغسطس 21، 2022

Comments:0

விரிவுரையாளர் பணிக்கு தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சி கட்டாயம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

TRB says Tamil paper marks are mandatory in lecturer exam: விரிவுரையாளர் தேர்வில் தமிழ் பாடத்தில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக அரசுப் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வேலைவாய்ப்பை பெறுவதை உறுதி செய்யவும், வெளிமாநிலத்தவர்கள் சேர்வதை தடுக்கும் வகையில், தமிழ் மொழித் தேர்வை கட்டாய தகுதி தேர்வாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் போன்றவை நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ் மொழித் தேர்வை கட்டாய தகுதித் தேர்வாக அறிவித்துள்ளது.

இந்தநிலையில், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 24 முதுநிலை விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், 49 இளநிலை விரிவுரையாளர் ஆகிய 155 காலிப் பணியிடங்களை நிரப்பவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதில் தமிழ் பாடப்பகுதியில் கேட்கப்படும் 50 வினாக்களில் 20 வினாக்களுக்கு சரியாக விடை அளித்தால் மட்டுமே, பிரதான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என டி.ஆர்.பி தெரிவித்துள்ளது.

விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் 50 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 20 (40 சதவீதம்) மதிப்பெண் பெற வேண்டும். அப்படிப் பெற்றால் மட்டுமே ‘பகுதி ஆ’ பிரிவில் பாடம் சார்ந்த 150 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டாய தமிழ் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிரதான தேர்வின் 150 மதிப்பெண்ணில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக எஸ்.சி. பிரிவினருக்கு 68 மதிப்பெண்ணும், எஸ்.டி. பிரிவினருக்கு 60 மதிப்பெண்ணும், மற்ற பிரிவினருக்கு 75 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة