TRB வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - நாள்: 24.08.22 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، أغسطس 25، 2022

Comments:0

TRB வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - நாள்: 24.08.22



ஆசிரியர் தேர்வு வாரியம்

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனம் 2020-2021

பத்திரிக்கைச் செய்தி

2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.072022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.

கல்வித் தகுதிக்களை தமிழ் வழியில் பயின்றதற்கான தமிழ் வழி சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இவ்வாரிய இணையதளத்தில் 24.08.2022 முதல் 27.08.2022 வரை வாய்ப்பு அளிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொழில்நுட்ப காரணங்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான வாய்ப்பு இவ்வாரிய இணையதளத்தி,ல் 26.08.2022 முதல் 30.08.2022 பிற்பகல் 5 மணி வரை வாய்ப்பு அளிக்கப்படும்.

உரிய இணையதள முகவரி குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

நாள்: 24-08-2022

தலைவர்

CLICK HERE TO DOWNLOAD

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة