பள்ளி TC-யில் தமிழுக்கு பதில் அசாமி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 14, 2022

Comments:0

பள்ளி TC-யில் தமிழுக்கு பதில் அசாமி

பள்ளி டிசியில் தமிழுக்கு பதில் அசாமி - கல்லூரி கவுன்சிலிங்கில் மாணவர்களுக்கு சிக்கல்

மேலுார்:மேலுார் பகுதி அரசு மேல்நிலைப்பள்ளி மாற்றுச் சான்றிதழில், முதல் மொழி என்ற இடத்தில், 'அசாமி' என குறிப்பிடப்பட்டுள்ளதால், கல்லுாரி கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்கள் சிக்கலை சந்தித்தனர்.

மதுரை மாவட்டம், மேலுார் அரசு கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதில், மேலுார் பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் சமர்ப்பித்த மாற்றுச் சான்றிதழில், முதல்மொழி என்ற இடத்தில் தமிழ் என்பதற்கு பதிலாக அசாமி என தவறாக பதிவாகி இருந்தது. இதனால் மாணவர்கள் கலந்தாய்வில் சிக்கலை சந்தித்தனர். பின்னாளில் உதவித் தொகை பெறுவதிலும் சிரமம் இருக்கும் என ஆசிரியர்கள் கூறினர்.

உதவித்தொகை

மாணவர்கள் கூறியதாவது:அரசு பள்ளியில் ஆறு முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு, மூவலுார் ராமாமிர்தம் திட்டத்தில் கல்வி உதவித் தொகை மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. எங்களுடைய மதிப்பெண் பட்டியலில் முதல் மொழி தமிழ் என்றும், மாற்றுச் சான்றிதழில் முதல் மொழி அசாமி எனவும் பதிவாகியுள்ளதால், உதவித்தொகை கிடைக்க வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைமை ஆசிரியர் கூறியதாவது:மாற்றுச் சான்றிதழில் முதல் மொழி அசாமி என பதிவானது தவறு தான். கணினியில் பதிவு செய்யும் போது, முதல் மொழி தமிழ் என காட்டுகிறது. ஆனால், மாற்றுச் சான்றிதழில் 'பிரின்ட்' செய்யும் போது, தொழில் நுட்ப பிழையால் அசாமி என மாறி விடுகிறது.

தவறான பதிவு

மாணவர்களின் உதவித் தொகைக்கு வழங்கப்படும் உண்மைத்தன்மை சான்றிதழ் மற்றும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு வாயிலாக, தவறான பதிவுகள் சரி செய்யப்படும். இதனால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews