'ஆன்லைன் வகுப்பின்போது பூனை வந்ததால் ஆசிரியர் டிஸ்மிஸ்..' 4.8 லட்சம் இழப்பீடு வாங்கிய ஆசிரியர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 21, 2022

Comments:0

'ஆன்லைன் வகுப்பின்போது பூனை வந்ததால் ஆசிரியர் டிஸ்மிஸ்..' 4.8 லட்சம் இழப்பீடு வாங்கிய ஆசிரியர்

சீனாவின் குவாங்சௌ (guangzhou) என்ற நகரத்தில் வசிப்பவர் லுவோ. ஓவிய ஆசிரியரான இவர், கடந்த ஜூன் மாதம் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பெடுத்து வந்தார். அப்போது இவரது வீட்டிலுள்ள செல்லப்பிராணியான பூனை ஆன்லைன் வகுப்பு திரையில் தோன்றியது. இந்த பூனை சுமார் 5 முறை கேமராவில் தெரிந்துள்ளது.

மெய்நிகர் (Virtual) வகுப்புகளை நடத்துகிற கல்விசார் தொழில்நுட்ப நிறுவனம், ஆசிரியர் லூவோ-வின் திரையில் பூனை திடீரென தோன்றியதாக அவரை பணியிலிருந்து நீக்கியது. அதோடு முந்தைய வகுப்பில் 10 நிமிடங்கள் தாமதாக வந்ததாகவும் குற்றம்சாட்டியது.

'ஆன்லைன் வகுப்பின்போது பூனை வந்ததால் ஆசிரியர் டிஸ்மிஸ்..' 4.8 லட்சம் இழப்பீடு வாங்கிய ஆசிரியர் - நடந்தது? கல்விசார் தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து லூவோ நடுவர் மன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்தார். மேலும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் முறையிட்டார். இதனை விசாரித்த நடுவர் மன்றம், ஆசிரியை லூவோவுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் அதன் தீர்ப்பை எதிர்த்து அந்நிறுவனம் மேல்முறையீடு செய்தது.

தற்போது இந்த வழக்கை விசாரித்த குவாங்சௌ டியானே மக்கள் நீதிமன்றத்தின் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது "முதலாளிகள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டுமெனச் சொன்னால், அவர்கள் அலுவலகத்திலிருந்து பணியாற்றுவதைப் போன்ற எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கக் கூடாது.

'ஆன்லைன் வகுப்பின்போது பூனை வந்ததால் ஆசிரியர் டிஸ்மிஸ்..' 4.8 லட்சம் இழப்பீடு வாங்கிய ஆசிரியர் - நடந்தது? நிறுவனங்களின் விதிகள் சட்டங்களுக்கு இணங்குவது மட்டுமல்லாமல், நியாயமானதாகவும் ஏற்புடையதாகவும் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஆசிரியர் லூவோவுக்கு 40,000 யுவான் (இந்திய மதிப்பில் 4.79 லட்சம் ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு ஆசிரியருக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வகுப்பின்போது பூனை தோன்றியதால் ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews