சிறப்பு துணை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சலுகை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، أغسطس 30، 2022

Comments:0

சிறப்பு துணை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சலுகை

நெல்லை பல்கலைக்கழகத்தில் சிறப்பு துணை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சலுகை

பேட்டை, ஆக.29 நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2019 2020-ம் கல்வி ஆண்டில் இளங்கலை இளம் வணிகவியல் மற்றும் இளம் அறிவியல் பாடங்களில் அனைத்து பிரிவுகளிலும் சேர்ந்துப்ப யின்ற மாணவர்கள் ஏப்ரல் 2022-ல் நடைபெற்ற ஒன்று முதல் 5-ம் பருவத் தேர்வில் முழுமையாக தேர்ச்சி பெற்று 6-ம் பருவத் தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத மற்றும் 6-ம் பருவத் தேர்வில் முழுமையாக தேர்ச்சி பெற்று ஒன்று முதல் 5-ம் பருவத் தேர்வு வரையிலான பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு (எழுத்து தேர்வு அல்லது செய்முறைத் தேர்வு) சிறப்பு துணைத் தேர்வுகள் வருகிற 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வுக் கட்டணம் ரூ.1000 ஆகும்.

மேலும், இறுதி பருவமாகிய (இளநிலை எனில் 6-ம் பருவம், முதுநிலை எனில் 4-ம் பருவம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் எனில் 2-ம் பருவம்) ஏப்ரல் 2022 தேர்விற்கு தகுதியுடைய வருகைப்பதிவு இருந்தும், தேர்வுக்கட்டணம் செலுத்த பல்கலைக்கழகம் மூன்று கடைசி வாய்ப்புகள் வழங்கிய போதும் சில மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தவில்லை. ஆதலால், அவர்களின் நலன் கருதி உரிய கட்டணம் செலுத்தி சிறப்பு தேர்வு எழுத பல்கலைக்கழகம் அமைதி வழங்கியுள்ளது. எனவே, அவ்வாறு உரிய கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்ப டுத்திக்கொள்ளலாம்.

மேற்கூறிய சிறப்புத்துணைத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வருகிற 1-ந் தேதி வரையில் பல்கலைக்கழக இணையதளத்தின் (www.msuniv.ac.in.) வழியாக தேர்வுக்கட்டணமாகிய ரூ.1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

மேற்கூறிய சிறப்பு துணைத்தேர்வுகள் மற்றும் சிறப்பு தேர்வுகள் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மட்டுமே நடத்தப்படும். தேர்வு அனுமதிச்சீட்டை மாணவர்கள் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இத்தேர்வுகளின் அட்டவணை தேர்விற்கு 5 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும். எனவே, மேற்கூறிய சிறப்பு துணைத் தேர்வு அல் லது சிறப்பு தேர்வுகளுக்கு தகுதியுடைய மாணவர்கள் அந்தந்த தேர்வுகளுக்கான கால அட்டவணையை கடைபிடித்து தேர்வு எழுத கேட்டுக் கொள்ளப்படுகிறர்கள்.

மேலும் நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாத மாணவர்கள் தேர்வாணையர் அலுவலகத்தை தேர்வு நாட் களில் அணுகி தேர்வு எழுதலாம். இந்த தகவலை, பல்கலைக்கழக பதிவாளர் (பொ) அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة