முதன்மை கல்வி அலுவலருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கண்டனம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 11, 2022

Comments:0

முதன்மை கல்வி அலுவலருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கண்டனம்!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வீடுகளில் 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் நீங்களாக மற்ற ஆசிரியர்கள்,ஆசிரியரல்லாத அலுவலர்களும் 50 ரூபாய் கொடுத்து தேசிய கொடியை வாங்கி கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.இது தமிழகம் முழுவதும் உள்ள பகுதிநேர ஆசிரியர்களிடம் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களின் மாவட்ட பொறுப்பாளர் திரு.பழ.கௌதமன் கூறுகையில்...

கரூர் மாவட்ட முதன்மை செயலாளரின் செயல் கடும் கண்டத்துக்குரியது. எமிஸ் இணையதளத்தில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கொடிகள் பெறப்பட்டுள்ளதால் பகுதிநேர ஆசிரியர்கள் நீங்கலாக மற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு கொடிகளை பெற்றுக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார். எமிஸ் இணையதளத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் விபரங்களும் பதிவேற்றப்பட்டுள்ளது என்பது ஒரு முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியாமல் இருப்பது வியப்பை அளிக்கிறது.அவருக்கு திருப்பூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் கடுமையான கண்டனத்தை பதிவு செய்வதாக தெரிவித்தார்.

பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில், சென்னையை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஆற்றலரசு கூறுகையில், ''எல்லா வகை பணிகளிலும், பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்துகின்றனர். ''அதேநேரம், நாட்டின், 75வது சுதந்திர தின விழாவில், தேசிய கொடியை விலைக்கு வாங்குவதற்கு கூட, பகுதி நேர ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை என்பது போல், பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியது; அடிப்படை உரிமைக்கு எதிரானது,'' என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews