வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - தமிழக அரசு சூப்பர் திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، أغسطس 11، 2022

Comments:0

வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - தமிழக அரசு சூப்பர் திட்டம்

கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமாகிய தாட்கோவே கடனாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாட்கோ மற்றும் HCL நிறுவனம் இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்கவுள்ளன. இதற்கு விண்ணப்பித்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பட்டப்படிப்பு மற்றும் படிப்பு முடிந்தவுடன் வேலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சேரும் மாணவர்களுக்கு முதல் ஆண்டில் இலவசப் பயிற்சி, மடிக்கணினி மற்றும் ரூ.10,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் ஆண்டில் HCL நிறுவனத்தில் திறமைக்கு ஏற்ப லட்சக்கணக்கில் சம்பளத்துடன் வேலை கூடவே இந்தியாவின் மதிப்புமிக்க பிட்ஸ் பிளானி, சாஸ்தரா, அமிட்டி பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு படிக்க வசதி செய்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமாகிய தாட்கோவே கடனாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 2020-21, 2021-22 கல்வியாண்டில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ மாணவியருக்காக மட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையோர் பயன் படுத்தி கொள்ளலாம்.

விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த இணையதள பக்கத்திற்குச் சென்று http://iei.tahdco.com/register.php விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்து பயனடையவும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة