தகுதியற்ற ஓய்வூதியதாரர்களை நீக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 11, 2022

Comments:0

தகுதியற்ற ஓய்வூதியதாரர்களை நீக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

தகுதியற்ற ஓய்வூதியதாரர்களை களையெடுக்கும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதார்கள் அனைவரும் தகுதியானவர்களா என அரசு ஆய்வு செய்து வருகிறது.

இறப்பு பட்டியல், பத்திரப்பதிவு, நகைக்கடன் சரிபார்ப்பு, அரசு அலுவலரை கொண்ட குடும்பங்கள் என பல்வேறு கோணங்களில் அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

40% மற்றும் அதற்கும் மேல் உடல் குறைபாடு உள்ளவர்களை அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

கணவரை இழந்து ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், மகன்கள் இல்லாத முதியோர்கள் உள்பட பலருக்கு சமூக நலப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அவர்களில் பலர் முறைகேடாக ஓய்வூதியம் பெற்று வருவது தொடர்பாக அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்ததன் பேரில் தகுதியற்ற ஓய்வூதியதாரர்களை களையெடுக்கும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews