ஒரே நாடு ஒரே சார்ஜர்! ஆண்ட்ராய்டு, ஐபோன் முதல் லேப்டாஒரே நாடு ஒரே சார்ஜர்! ஆண்ட்ராய்டு, ஐபோன் முதல் லேப்டாப் வரை.. மத்திய அரசின் புதிய திட்டம்!ப் வரை.. மத்திய அரசின் புதிய திட்டம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 11, 2022

Comments:0

ஒரே நாடு ஒரே சார்ஜர்! ஆண்ட்ராய்டு, ஐபோன் முதல் லேப்டாஒரே நாடு ஒரே சார்ஜர்! ஆண்ட்ராய்டு, ஐபோன் முதல் லேப்டாப் வரை.. மத்திய அரசின் புதிய திட்டம்!ப் வரை.. மத்திய அரசின் புதிய திட்டம்!

இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே சார்ஜர் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளது. மணப்பாக்கத்தில் பிரீமியம் 2 & 3 படுக்கையறை குடியிருப்புகள் @ 83 லட்சம்* முதல் நவநாகரீக உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். தற்போதைய சூழலில் வீட்டில் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏறக்குறைய அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறோம். இதில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் பல செல்போன்களும், அதற்கான சார்ஜர்கள் உள்ளன. இதனால் எலக்ட்ரானிக் கழிவுகள் அதிகரித்து வருகிறது.

பா.ஜ.க. சொல்வது உண்மையா?

ஒரே சார்ஜர் திட்டம் இந்நிலையில் தான் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அது என்னவென்றால் இந்தியா முழுவதும் அனைத்துக்கும் ஒரே மாதிரியான சார்ஜரை பயன்படுத்துவது தான். அதுவும் ஒருவரின் ஐபோன், ஆண்ட்ராய்டு செல்போன், டேப்லேட், லேப்டாப் என ஒருவர் தற்போது பயன்படுத்தி வரும் முக்கிய மின்னணு கேஜெட்களுக்கு பொதுவான சார்ஜர் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடிதம் எழுதிய துறை செயலாளர் இதற்கான நடவடிக்கையை தற்போது மத்திய அரசு துவங்கி உள்ளது. அதன்படி மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் அதன் செயலாளர் ரோகித் குமார் சிங் செல்போன், மடிக்கணினி, டேப்லேட் தயாரிப்புக்கான தொழில்துறை மற்றும் பிற சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சாத்தியக்கூறுகளை ஆராய..

அதில் ‛‛ பழைய மற்றும் புதிய சாதனங்களுக்கு இடையில் சார்ஜ் ஏற்றுவதில் பிரச்சனை உள்ளது. இதனால் பொதுமக்கள் தனித்தனி சார்ஜர், கேபிள் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் மக்கள் சிரமத்தை சந்திப்பது மட்டுமின்றி மின்நுகர்வு மற்றும் மின்னணு கழிவும் அதிகரிக்கிறது. இதனால் ஒவ்வொரு வீட்டிலும் பல சார்ஜர்கள் பயன்படுத்தும் முறையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். அனைத்து பொருட்களுக்கும் தனித்தனி சார்ஜர்கள் உருவாக்குவதற்கு பதில் ஒரே மாதிரியான சார்ஜர்களை பயன்படுத்தும் வகையில் யோசித்து அதற்கானசாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம் மேலும் இதுதொடர்பாக ஆகஸ்ட் 17 ல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தொழில்துறை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள் கண்டுபிடிப்பு கூட்டமைப்புகளின் (EPIC) அறக்கட்டளை உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் தகவல் தொழில்நுட்பத்திற்கான உற்பத்தியாளர்கள் சங்கம் (MAIT), இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI), இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி ஆப் இந்தியா (ASSOCHAM), நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் (CEAMA), இந்திய எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் (IEEMA) பங்கேற்க உள்ளனர்.

மேலும் ஐஐடி கான்பூர், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்) வாரணாசி, இந்தியா செல்லுலார் மற்றும் எலக்டரானிக்ஸ் அசோசியேஷன் ஆகியவையும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காரணம் என்ன? கடந்த ஆண்டு 2021ல் நவம்பரில் கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐநா காலநிலை மாற்ற தொடர்பான மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாழ்க்கையை முறைக்கு மக்கள் பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதனடிப்படையில் தான் தற்போது இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதனை நிறைவேற்றினால் நாட்டில் மின்னணு கழிவுகள் குறைய வாய்ப்புள்ளது. இதனால் தான் ஒரே நாடு ஒரே சார்ஜர் என்ற அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது.

ஒரே நாடு ஒரே சார்ஜர் மேலும் இந்தியாவை பொறுத்தமட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தான் தற்போது ஒரே நாடு ஒரே சார்ஜர் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்து வரும் 17 ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இதுபோன்ற திட்டம் இன்னும் எந்த நாட்டிலும் அமலுக்கு வரவில்லை. மாறாக ஐரோப்பிய நாட்டில் இத்தகைய திட்டத்துக்கான கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. ஒரே வகையான சார்ஜரை பயன்படுத்தும் திட்டத்தை 2024ல் அமல்படுத்தும் வகையில் அங்கு கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews