அமேசான் காட்டில் வாழ்ந்த கடைசி மனிதர் காலமானார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، أغسطس 31، 2022

Comments:0

அமேசான் காட்டில் வாழ்ந்த கடைசி மனிதர் காலமானார்

அமேசான் காட்டில் வாழ்ந்த கடைசி மனிதர் காலமானார் - பூர்வகுடிகள் இனி யாருமில்லை
பிரேசிலின் அடர்ந்த வனமான அமேசான் காட்டில், பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் பல ஆண்டாக தனியாக வசித்து வந்தார். தனது உறவுகளை இழந்த அவர் வெளி மனிதர்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தார். அவரது பெயர் என்ன, என்ன மொழி பேசுவார் என எந்த தகவல்களும் யாருக்கும் தெரியாது.

உலகின் தனிமை மனிதர் என அழைக்கப்பட்ட அவர், அமேசான் காட்டில் பொலிவியா எல்லையில் உள்ள ரோன்டோனியா மாகாணத்தின் தனாரு பகுதியில் தனியாக வாழ்ந்து வந்தார். அவர், மேன் ஆஃப்தி ஹோல் என்று அழைக்கப்பட்டார். அதாவது, நிலத்தின் அடியில் குழிதோண்டி அதில் அந்த கடைசி மனிதர் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 60 வயதான நிலையில் அந்த பூர்வ பழங்குடியினத்தவர் மரணமடைந்துள்ளார்

இது குறித்து, பிரேசில் உள்ள பழங்குடியினருக்கான அமைப்பான புனாய் கூறுகையில், ‘‘நாங்கள் தொடர்ந்து அமேசான் காட்டில் பழங்குடியினரின் கடைசி மனிதரை கண்காணித்து வந்தோம். சமீபகாலமாக உடலில் பசுந்தழைகளையும், பறவைகளின் இறக்கைகளையும் கட்டியிருந்தார். இவ்வாறு பழங்குடியினர் இருப்பது அவர்கள் இறப்புக்கு தயாராவதைக் குறிக்கும். அந்த வகையில் கடந்த 23ம் தேதி அந்த கடைசி மனிதர் உயிரிழந்தநிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மனிதருக்கு ஏறக்குறைய 60 வயது இருக்கும்’’எனத் தெரிவித்துள்ளது.

அமேசானில் வாழ்ந்த பூர்வ பழங்குடியினத்தவர்களில் கடைசி மனிதர் இவர்தான். இவரும் இறந்து விட்டதால் பூர்வ குடிகள் யாரும் இல்லை.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة