அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கு தொழில்நுட்ப கல்வித்துறை பணியாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்சி., எஸ்டி பணியாளர் நலச்சங்க மாநில பொது செயலாளர் டேவிட் மகிமை தாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 75வது சுதந்திர தின உரையில் மாநில அரசு பணியாளர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி நேற்று முன்தினம் அரசாணை வெளிட்டமைக்காக தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்சி., எஸ்டி பணியாளர் நலச்சங்கம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
முதல்வரின் அறிவிப்பின் மூலம் அரசு பணியாளர்கள் பயனடைவார்கள். அதே நேரத்தில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 1.1.2022 முதல் அகவிலைப்படி வழங்கப்பட்டதை போல வழங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.