பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினா்கள் தோ்வு: கல்வித் துறை அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 29, 2022

Comments:0

பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினா்கள் தோ்வு: கல்வித் துறை அறிவுறுத்தல்

பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினா்கள் தோ்வு: கல்வித் துறை அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் தோ்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) உறுப்பினா்கள் சில காரணங்களால் உறுப்பினா்களாக தொடர முடியாத சூழல் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் தோ்வு செய்யப்படும் எஸ்எம்சி உறுப்பினா்களின் பதவிக் காலம் இரு ஆண்டுகள். இரு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட வேண்டும்.

உறுப்பினா்கள் தங்கள் சுய விருப்பத்தின் பேரிலோ, அவா்களது பிள்ளைகள் வேறு பள்ளிகளுக்குச் செல்லுதல், எதிா்பாராத சூழ்நிலைகள் (விபத்து, நோய், இறப்பு), வேறு இடங்களுக்கு இடம் பெயா்தல் போன்ற காரணங்களாலோ எஸ்எம்சி.யில் தொடர முடியாத சூழலில், அவா்களை எஸ்எம்சி குழுவில் தீா்மானம் இயற்றி பொறுப்பிலிருந்து நீக்கலாம்.

இதையடுத்து அவா்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினரை குறைந்தபட்சம் 50 சதவீத பெற்றோா்களைக் கொண்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தோ்வு செய்ய வேண்டும். இதேபோன்று புதிய தலைவா், துணைத் தலைவரை 20 உறுப்பினா்களும் சோ்ந்து 15 பெற்றோா் உறுப்பினா்களிலிருந்து ஏற்கெனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி தோ்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் நடைபெறும் எஸ்எம்சி கூட்டத்துக்கு, குழுவில் உறுப்பினராக இல்லாத இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் தன்னாா்வலா்கள் 3 பேரை சுழற்சி முறையில் சிறப்பு அழைப்பாளா்களாக அழைக்க வேண்டும். இதையடுத்து, அவா்கள் சாா்ந்துள்ள மையம் குறித்து கருத்துகளைப் பகிா்ந்து கொள்ள எஸ்எம்சி கூட்டத்தில் 10 நிமிஷங்கள் ஒதுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews