வெறும் ரூ.29 வீதம் முதலீடு; ரூ 4 லட்சம் ரிட்டர்ன்: இந்த திட்டம் தெரியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 22, 2022

Comments:0

வெறும் ரூ.29 வீதம் முதலீடு; ரூ 4 லட்சம் ரிட்டர்ன்: இந்த திட்டம் தெரியுமா?

ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 696 முதலீடு செய்வீர்கள். இந்தத் தொகை முதிர்ச்சியடையும்போது உங்களுக்கு ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் கிடைக்கும்

எதிர்காலத்திற்காக முதலீடு செய்வது எப்போதுமே நல்ல யோசனையாகும். பொதுவாக இந்திய மக்கள் பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்வதை பெரிதும் விரும்புகின்றனர்.

எல்ஐசி பாலிசிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தும், தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டமான எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ரூ.29 முதலீடு செய்தால், இந்தக் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்தைப் பெறலாம். இந்தத் திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பை ஒருங்கிணைக்கிறது. பாலிசிதாரரின் முதிர்ச்சிக்கு முன்னதாக பாலிசிதாரரின் இறப்பு உள்ளிட்ட துரதிர்ஷ்டவசமான நிகழ்வின் போதும், பாலிசிதாரரின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கப்படும்.

கூடுதலாக, இந்தத் திட்டத்தில் கடன் வசதியும் உள்ளது. எல்ஐசி ஆதார் ஷீலா திட்டத்தின் கீழ் அதிகபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சத்தை தாண்டக்கூடாது, இந்த பாலிசியின் கீழ் குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ.75,000 ஆகும்.

எல்ஐசி ஆதார் ஷீலா பாலிசியில் ஒருவர் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகை ரூ. 3 லட்சம் என்பதை இது குறிக்கிறது. இந்த பாலிசியின் முதிர்வு காலம் பத்து முதல் இருபது ஆண்டுகள் வரை இருக்கலாம்.

பிரீமியத்தை ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு காலாண்டிலும், ஒவ்வொரு அரையாண்டு அல்லது ஒவ்வொரு வருடமும் செலுத்தலாம். இந்தத் திட்டத்தில் தினந்தோறும் ரூ.29 வீதம் மாதம் ரூ.1000 முதலீடு செய்ய வேண்டும். அதாவது ஆண்டுக்கு தோராயமாக ரூ.10,959 செலுத்துவீர்கள்.

அந்த வகையில் ஒரு 20 ஆண்டுகள் முதலீடு செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் 20 ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 696 முதலீடு செய்வீர்கள். இந்தத் தொகை முதிர்ச்சியடையும்போது உங்களுக்கு ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் 8 வயது முதல் 55 வயது வரை உள்ள அனைத்துப் பெண்களுக்கும் முதலீடு செய்யலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews