சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியீடு - Honble Chief Minister released the Road Safety Awareness Manual for Highways Department [Press Release No : 1442 ] - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أغسطس 22، 2022

Comments:0

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியீடு - Honble Chief Minister released the Road Safety Awareness Manual for Highways Department [Press Release No : 1442 ] - PDF

செய்தி வெளியீடு எண்: 1442

நாள்: 22.08.2022

செய்தி வெளியீடு

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.

மாண்புமிகு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (22.8.2022) தலைமைச் செயலகத்தில், பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் நெடுஞ்சாலைத் துறையால் தயாரிக்கப்பட்டுள்ள சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார்.

நல்ல சாலை கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் தமிழ்நாடு. இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் மொத்த நீளம் 2.81 இலட்சம் கிமீ ஆகும். இவற்றில், நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் சுமார் 70,556 கி.மீ நீளச் சாலைகள் உள்ளன. இச்சாலைகள் இந்திய தேசிய ஆணைய நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், மற்றும் மாவட்ட இதர சாலைகள் என பல்வேறு பிரிவுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற துறைகளால் பராமரிக்கப்படும் சாலைகளும் உள்ளன.

சாலைக் கட்டமைப்பு, அதன் விதிமுறைகள், சாலைக் குறியீடுகள் ஆகியவை குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. ஆகையால், சாலைப் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றவும், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கவும், பொதுமக்கள் சாலைகளை சரியான வகையில் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

இக்கையேட்டில் வாகன வேகத்தின் தாக்கங்களும், உலக சுகாதார நிறுவனம், இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் சாலை விபத்து தொடர்பான புள்ளி விவரங்கள், விபத்திற்கான காரணங்கள். தவிர்த்திடும் வழிமுறைகள், சாலை விதிகள், சாலைப் பயணத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், எச்சரிக்கைக் குறியீடுகள், தகவல் தெரிவிக்கும் பலகைகள் ஆகிய விவரங்கள், இலகுரக, கனரக வாகனம் இயக்குபவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் பற்றிய படவிளக்கம், வாகனப் பராமரிப்பு, முதலுதவி சேவைப் பற்றிய விளக்கங்கள் மற்றும் உதவி எண்கள் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இஆப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ், இ.ஆ.ப, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் திரு. பூ.இரா.குமார், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் திரு. ரெ.கோதண்டராமன், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் திரு. இரா. சந்திரசேகர், தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர் திரு. நா.பாலமுருகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


CLICK HERE TO DOWNLOAD

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة