தமிழக பாட புத்தகங்களில் சுதந்திரபோராட்ட வரலாறு மறைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 14, 2022

1 Comments

தமிழக பாட புத்தகங்களில் சுதந்திரபோராட்ட வரலாறு மறைப்பு

The history of freedom struggle in Tamil Nadu is hidden in textbooks,'' said BJP State President Annamalai. He spoke at the Independence Day Amuta Festival in Tiruputhur, Sivagangai District.

We are in a place that is famous for history. In 1801, two Tamils ​​named Periya Maruthu and Chinna Maruthu declared the first war against the British. They are the natives of this heroic land. The people who voiced their right that the British were not fit to rule this country. Even though they were peasants, they bravely fought against the declaration of war at the gate of Srirangam Fort. The 75th Independence Day of the country is going on.

We have come here to pay tribute to Marutubandyar, who was hanged and imprisoned. The history about them is hidden in the textbooks. The more we let our children know about them, the more they will grow up to be good people.

''தமிழக பாட புத்தகங்களில் சுதந்திர போரட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.சிவகங்கை மாவட்டம், திருப்புத்துாரில் நடந்த சுதந்திர தின அமுத பெருவிழாவில் அவர் பேசியதாவது:

சரித்திரப் புகழ் பெற்ற இடத்தில் இருக்கிறோம்.கடந்த, 1801ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதல் போர் பிரகடனம் செய்தவர்கள் பெரிய மருது, சின்ன மருது என்ற இரண்டு தமிழர்கள்.வீரம் நிறைந்த இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள்.

ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆள தகுதியற்றவர்கள் என, உரிமைக்கு குரல் கொடுத்தவர்கள்.

பாளையக்காரர்களாக இருந்தாலும், ஸ்ரீரங்கம் கோட்டை கதவில் போர் பிரகடனத்தை ஒட்டி துணிந்து எதிர்த்து போரிட்டவர்கள்.நாட்டின், 75 வது சுதந்திர தினம் நடந்து கொண்டிருக்கிறது.

மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட, சிறை பிடிக்கப்பட்ட இங்கு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளோம்.இவர்கள் குறித்த வரலாறு பாடப்புத்தகத்தில் மறைக்கப்பட்டுள்ளது. இவர்களைப் பற்றி நமது குழந்தைகளுக்கு எந்தளவு தெரியப்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு அவர்கள் நல்ல மனிதர்களாக வளர்வர்.இவ்வாறு அவர் பேசினார்.

1 comment:

  1. மருது சகோதரர்கள் தொடர்பாக நிகழ்வுகள் 8 & 10 சமூக அறிவியல் மற்றும் 11 ஆம் வகுப்பு வரலாறு பாட புத்தகங்களில் இடம் பெற்று உள்ளன.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews