புத்தகப்பையில் பாம்புக்கடி விழிப்புணர்வு - அசத்தும் தன்னார்வலர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 15, 2022

Comments:0

புத்தகப்பையில் பாம்புக்கடி விழிப்புணர்வு - அசத்தும் தன்னார்வலர்

Coimbatore Latest News : கோவை மற்றும் ஈரோடு சுற்றுவட்டாரப்பகுதிகளில் மலைக்கிராம பழங்குடியின அரசுப் பள்ளிகளுக்கு நேரில் சென்று பாம்புக்கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார், பாம்புக்கடி ஆராய்ச்சியாளரும் இங்கிலாந்து நாட்டில் உள்ள ரெடிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சக்திவேல் வையாபுரி.

கோவை மற்றும் ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் பாம்புக்கடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான சக்திவேல் வையாபுரி, மலைக்கிராம பழங்குடியின அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாம்புக்கடி தொடர்பான விழிப்புணர்வுகள் அடங்கிய கல்வி உபகரணங்களை வழங்கியுள்ளார்.

இந்தியாவில் பாம்புக்கடியால் ஆண்டுதோறும் சுமார் 58 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் வரையிலும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டு மரணிக்கின்றனர். உலக அளவில் பாம்புக்கடியால் ஆண்டுதோறும் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் சுமார் 1.5 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். மேலும், 5 லட்சம் பேர் நிரந்தர உடல் குறைபாடு அடைகின்றனர்.

பெரும்பாலும் ஊரகப்பகுதிகளில் வசிக்கும் மக்களும், விவசாயிகளும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படியாக சமூகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் பாம்புக்கடி குறித்து முறையான விழிப்புணர்வு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத தேவையாக உள்ளது.

இந்த சூழலில் பாம்புக்கடி குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் புரிதலை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் பாம்புக்கடி ஆராய்ச்சியாளரும் இங்கிலாந்து நாட்டில் உள்ள ரெடிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சக்திவேல் வையாபுரி.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews