மதுரையில் புத்தகக் கண்காட்சி - பத்திரிக்கைச் செய்தி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 21, 2022

Comments:0

மதுரையில் புத்தகக் கண்காட்சி - பத்திரிக்கைச் செய்தி

மதுரையில் புத்தகக் கண்காட்சி!

மதுரை தமுக்கம் மைதானத்தில், செப்டம்பர் 3ம் தேதி புத்தக கண்காட்சி துவங்கி 13ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் மாலை 9 மணி வரை கண்காட்சி அரங்கு திறந்திருக்கும் - மதுரை மாவட்ட ஆட்சியர்

பத்திரிக்கைச் செய்தி

கூடல் மாமதுரையிலே கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல உத்தரவிட்டதன் பேரில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகின்ற செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் 12ஆம் தேதி முடிய அனைத்து நாட்களிலும் மதுரை தமுக்கம் கலை அரங்கத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பாக ஏறக்குறைய 200 புத்தக அங்காடிகள் அமைக்கப்படவுள்ளது. இப்புத்தக கண்காட்சியில் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட சிறார் அரங்கமும், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் விருப்பமுள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் கவிதை, கட்டுரை, பேச்சு, புனைவு, நாடகம், சினிமா, தொல்லியல் மற்றும் நுண்கலை தொடர்பான பயிலரங்கங்கள் சிறந்த வல்லுநர்களைக்கொண்டு நடத்தப்படவுள்ளது.

தினந்தோறும் மாலை வேளையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர பேச்சாளர்களின் உரை வீச்சுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன. எனவே, வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் பொருட்டு இப்புத்தக கண்காட்சியில் சிறார்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். -மாவட்ட ஆட்சித் தலைவர்,

மதுரை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews