மருத்துவ மாணவர்களின் கல்வி - முதல்வருக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أغسطس 21، 2022

Comments:0

மருத்துவ மாணவர்களின் கல்வி - முதல்வருக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் கடிதம்

உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மருத்துவ மாணவர்களின் கல்வி தொடர நடவடிக்கை: முதல்வருக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் கடிதம்

வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கம் செயல் தலைவர் உஸ்மான்கான் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ரஷ்யா, உக்ரைன் இடையே முண்ட போர் காரணமாக அங்கு பயிலும் சுமார் 20000 இந்திய மாணவர்கள் அதிலும் குறிப்பாக 3000 தமிழக மாணவர்கள் ஆகியோரின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது.

இந்த சூழல் நிலையில் தாங்களும் தங்களுடைய அமைச்சர்களும், மத்திய அரசோடு இணைந்து தீவிரமாக பணியாற்றி அவர்களை பாதுகாப்பாக தாய் நாட்டிற்கு அழைத்து வந்ததை நன்றியோடு நாங்கள் நினைவு கூற விரும்புகிறோம். இந்த நிலையில் ஏறத்தாழ எட்டு மாதங்கள் கடந்தும் போர் முடிவுக்கு வராத சூழ்நிலையில் மருத்துவ மாணவர்களின் கல்வி தற்போது கேள்விக்குறியான நிலையில் உள்ளது. மருத்துவ கல்வியாண்டு வருகின்ற செப்டம்பர் முதல் துவங்க உள்ளது.

இந்த சூழலில் ஏற்கனவே போர் காரணமாக அங்கிருந்து திரும்பி வந்த மாணவர்கள் இணையம் மூலமாக கல்வியை தொடர்ந்து வருகின்றனர். மருத்துவ கல்வி என்பது நேரடியாக கள அனுபவத்தோடு பயில வேண்டிய ஒரு படிப்பாக இருக்கின்ற நிலையில் இணையம் வாயிலாக கல்வியை கற்பது என்பது அவர்களது எதிர்காலத்திற்கு போதுமானதாக இருக்காது.

ஆகவே மத்திய அரசு போர்க்கால நடவடிக்கையாக உடனடியாக இந்த இறுதி ஆண்டு மாணவர்கள் விஷயத்தில் அவர்களுடைய கல்வி பாதிக்காத வகையில் உடனடியாக சிறந்த தீர்வை எடுக்க வேண்டும். ஏனைய வகுப்பு மாணவர்களுக்கும் அவர்களது கல்வி தொடரத்தக்க வகையில் மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசும் அதற்கு தேவையான அழுத்தங்களை தமிழகத்தின் சார்பில் தாங்கள் முன்னேடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் துயர் துடைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة