மதுரையில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர 73,260 மாணவர்கள் விண்ணப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 02, 2022

Comments:0

மதுரையில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர 73,260 மாணவர்கள் விண்ணப்பம்

மதுரையில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர 73,260 மாணவர்கள் விண்ணப்பம்

மதுரை : மதுரை மண்டலத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் பல்வேறு பாடப் பிரிவுகளில் சேர 73,260 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் விரைவில் நடக்கவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மதுரை மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குனரின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் 29 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் மூன்று கல்லுாரிகளிலுள்ள 2448 உட்பட மொத்தம் 14,430 இடங்களுக்கு 73,260 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இளங்கலை பி.காம், உளவியல், வரலாறு, ஆங்கிலம் உள்ளிட்ட கலைப் பிரிவு பாடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர் விருப்பம் தெரிவித்துள்ளனர். சம்மந்தப்பட்ட கல்லுாரிகள் சார்பில் மாணவர் மதிப்பெண்ணிற்கு ஏற்ப தரவரிசை பட்டியல் தயாரிக்கும் பணி முடிந்துள்ளது. என்று மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம் கூறியுள்ளார்.

சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுக்காக காத்திருந்ததால் இந்தாண்டு கவுன்சிலிங் நடத்த சற்று தாமதமாகியுள்ளது. அனைத்து கல்லுாரிகளும் கவுன்சிலிங் நடத்த தயார் நிலையில் உள்ளது என்றும். விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அரசு, உதவி பெறும் கல்லுாரிகளில் மூவலுார் ராமமிர்தம் அம்மையார் பெயரில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் 16,478 பேர் இதுவரை பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews