சீருடைப்பணியாளர்களுக்கான தேர்வில் சி பிரிவு பணியிடத்தில் 5 சதவீதம் மாஜி ராணுவத்தினருக்கு ஒதுக்கீடு: ஆணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 02, 2022

Comments:0

சீருடைப்பணியாளர்களுக்கான தேர்வில் சி பிரிவு பணியிடத்தில் 5 சதவீதம் மாஜி ராணுவத்தினருக்கு ஒதுக்கீடு: ஆணை வெளியீடு

தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரியம் வெளியிட்ட ஆணை:

முன்னாள் மேஜர் வி.எஸ்.ஜெயக்குமார் இணை இயக்குநர், முன்னாள் படைவீரர் நல இயக்குனரகம் தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் 5% இடஒதுக்கீட்டை முன்னாள் ராணுவத்தினருக்கு மட்டுமே வழங்க வேண்டும். மேலும், முன்னாள் ராணுவ வீரர்கள் இளம் வயதில் ராணுவ படையில் இருந்து ஓய்வு பெறுவதால் வேலை வாய்ப்பு மற்றும் மறுவாழ்வுக்காக இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஆனால் முன்னாள் துணை ராணுவ படை பணியாளர்கள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். இந்த இடஒதுக்கீட்டை முன்னாள் துணை ராணுவ பணியாளர்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் முன்னாள் ராணுவ படைவீரர்களுக்கு மறு வேலை வாய்ப்புக்கான உரிமையான வாய்ப்புகளை இழக்கச் செய்யும். 18.04.2022 நாளிட்ட தமிழக அரசுக் கடிதத்தில், சிறப்பு விதிகளின்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டம், 2016ன்படி 5% இடஒதுக்கீடு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மேற்கண்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, இவ்வாரியம் 3,552 இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்புப் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான, பொது தேர்வு அறிவிக்கை முன்னாள் துணை ராணுவ பணியாளர்கள் தவிர்த்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மட்டும் 5 % இட ஒதுக்கீடு வழங்கப்படும். இவ்வாறு வாரியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews