விவசாயிகள் கவனத்துக்கு... மின் மோட்டர்கள் அமைக்க ரூ.10,000 மானியம் பெறுவது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 11, 2022

Comments:0

விவசாயிகள் கவனத்துக்கு... மின் மோட்டர்கள் அமைக்க ரூ.10,000 மானியம் பெறுவது எப்படி?

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் நிலத்துக்கு மின்மோட்டார்கள் அமைப்பதற்கு ரூ.10,000 மானியம் பெற முடியும்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு புதிதாக மின் மோட்டார் பம்ப் பொருத்தவும், பழைய மின் மோட்டர்களை மாற்றவும் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திருப்பூர், தாராபுரம், உடுமலை பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு மானியத்தில் புதிய மின் மோட்டர் பொறுத்தவும், பழைய மின் மோட்டரை மாற்றி அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில், 3 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டும் பயன் பெறமுடியும். திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதியதாக பொருத்தவும் அதிகபட்சமாக ரூ.10,000 மானியமாக வழங்கப்படுகிறது.

சிறு, குறு விவசாய சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள வரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம், வங்கி புத்கத்தின் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

திருப்பூர், தாராபுரம், உடுமலை உட்கோட்ட பகுதி விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) ஜெயக்குமாரை 94432 43495 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் திருப்பூர், தாராபுரம், உடுமலை உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews