நீட் தேர்வெழுத வந்த மாணவிக்கு நடந்த கொடுமை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يوليو 18، 2022

Comments:0

நீட் தேர்வெழுத வந்த மாணவிக்கு நடந்த கொடுமை

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வெழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்னது குறித்து பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கடும் கோபமடைந்த பெற்றோர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார்அளித்துள்ளனர். திருவனந்தபுரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அயூர் பகுதி. இங்கு நேற்று நடைபெற்ற நீட் தேர்வின்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.



இதையும் படிக்க | Ennum Ezhuthum - All Weeks Lesson Plan 2022 - 2023

இது குறித்து பெற்றோர் கூறுகையில், நாங்கள் 12 மணிக்கு தேர்வு மையத்தில் எங்கள் பெண்ணை இறக்கிவிட்டோம். சிறிது நேரத்தில் துப்பட்டாவைக் கொண்டுவருமாறு கூறினார்கள். நாங்களும் கொண்டு போய் கொடுத்தோம். தேர்வு முடிந்து, எங்களது மகள் வெளியே வரும்போதுதான் என்ன நடந்தது என்பதே எங்களுக்குத் தெரிந்தது.



அவரது உள்ளாடையில் இருந்த இரும்புக் கொக்கியால், அவர் நுழைவுவாயிலில் செல்லும் போது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அந்த உள்ளாடையை அகற்றினால்தான் உள்ளே நுழைய அனுமதிக்கப்படும் என்று தேர்வு அறை அதிகாரிகள் கூறிவிட்டதாகவும், அந்த தேர்வு நடந்த கல்லூரி நிர்வாகத்துக்குக் கூட இதில் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة