கள்ளக்குறிச்சி கலவரத்தைக் கண்டித்து இன்று விடுமுறை அறிவித்த தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் வன்முறை நிகழ்ந்த தனியார் பள்ளியில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று வன்முறை ஏற்பட்டது. பிளஸ் 2 மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும், பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிக்க | தனியார் பள்ளியில் அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆய்வு...
கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த போராட்டம் நேற்று கலவரமாக மாறியது. காவல் துறையினர் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இதில், பேருந்துகள், காவல் துறை வாகனங்கள் தீக்கிரையாகின. பள்ளி வளாகமும் சூறையாடப்பட்டது.
இந்நிலையில், வன்முறை நிகழ்ந்த பள்ளியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இதையும் படிக்க | COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF CLERKS - PDF
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும். இன்று விடுமுறை அறிவித்த தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். கனியாமூர் தனியார் பள்ளி தொடர்பான ஆய்வறிக்கையை முதல்வரிடம் அளித்து அதன்பிறகான ஆலோசனைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கப்படும் எனத் தெரிவிய்த்தார்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.