Free coaching for IBPS Clerk Examination through State Career Guidance Center - Press Release - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يوليو 27، 2022

Comments:0

Free coaching for IBPS Clerk Examination through State Career Guidance Center - Press Release - PDF

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமானது எழுத்தர் (Clerk) பதவிக்கான காலிப்பணியிடங்களின் அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் IBPS – தேர்வுக்கான இலவசபயிற்சி வகுப்புகள் 05.08.2022 முதல் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ஆர்வமும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் (Whatsapp) எண்ணிற்கு தங்களது பெயர் . கல்வித்தகுதி, முகவரி ஆகியவற்றை அனுப்பி தங்களின் பெயரினை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இப்பயிற்சி வகுப்பிற்கு வருகைதரும் தேர்வர்கள் தங்களது IBPS - தேர்வுக்கான விண்ணப்ப நகல் மற்றும் தங்களது புகைப்படம் −1 ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வரவேண்டும். மேலும் இப்பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்க்கான தகுதியும், அனுபவமும் மற்றும் விருப்பமும் உள்ள பாட வல்லுநர்கள் மேற்படி தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம். அவர்களுக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட மதிப்பூதியம் வழங்கப்படும்.

இப்பயிற்சி வகுப்பிற்கு கலந்துகொள்ள பதிவு செய்ய வாட்ஸ் அப் (Whatsapp) எண்- 9597557913. இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்கள் அறிய - 044-22501032 எண்ணை தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல் முகவரி peeochm@gmail.com. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.

CLICK HERE TO DOWNLOAD

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة