கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வட்டார கல்வி அலுவலகத்தில் அதிகாரிகளிடம், மதுபோதையில் தலைமையாசிரியர் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.
மேப்பிலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியரான சேகர், நாள்தோறும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதாக புகார் எழுந்தது. அதன் பேரில், திருநாவலூரில் வட்டார கல்வி அலுவலர் முரளி கிருஷ்ணன், தலைமையாசிரியர் சேகரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சேகர், மது போதையில் அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்டு தகாத வார்த்தைகள் பேசியதோடு, அலுவலகத்தில் இருந்த பதிவேடுகள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி சென்றார்.
இதனையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.