தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 440-க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ளசுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில்நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 14-ம்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. மொத்தம் 2 லட்சத்து 11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.69 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும், 1.58 லட்சம் பேர் தங்களின் அசல் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர்.
இந்த நிலையில், மாணவர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றவும் இன்றுடன் (ஜூலை 29) காலஅவகாசம் முடிவடைகிறது. எனவே, மாணவர்கள் சான்றிதழ்களை இன்றே பதிவேற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.tneaonline.org என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 லட்சத்து 11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.69 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். 1.58லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர்.
بحث هذه المدونة الإلكترونية
الجمعة، يوليو 29، 2022
Comments:0
Home
counseling News
ENGINEERING
சான்றிதழ்
பொறியியல்
பொறியியல் கல்லூரி
மாணவர் சேர்க்கை
பொறியியல் மாணவர் சேர்க்கை: சான்றிதழ்களை பதிவேற்ற இன்று கடைசி நாள்
பொறியியல் மாணவர் சேர்க்கை: சான்றிதழ்களை பதிவேற்ற இன்று கடைசி நாள்
Tags
# counseling News
# ENGINEERING
# சான்றிதழ்
# பொறியியல்
# பொறியியல் கல்லூரி
# மாணவர் சேர்க்கை
மாணவர் சேர்க்கை
التسميات:
counseling News,
ENGINEERING,
சான்றிதழ்,
பொறியியல்,
பொறியியல் கல்லூரி,
மாணவர் சேர்க்கை
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.