கல்விக் குறியீடு' தமிழகம் முன்னிலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 05, 2022

Comments:0

கல்விக் குறியீடு' தமிழகம் முன்னிலை

ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால், அது கல்வியின் வழியாகத்தான் சாத்தியப்படும். 6. அறிவார்ந்த சமுதாயத்தைக் கல்வி நிலையங்களால் மட்டுமே உருவாக்க முடியும். அதுவும் பள்ளிக் கல்விக்குதான் அதிக முக்கியத்துவம் இருக்கிறது. அதனால்தான் நாடு முழுவதுமே இலவசப் பள்ளிக் கல்வித் திட்டங்கள் அமலில் இருந்து வருகின்றன. வறுமையின் காரணமாக எந்த ஒரு குழந்தைக்கும் கல்வி கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதற்காக இந்தியாவில் உள்ள எல்லா மாநில அரசுகளுமே பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கிக் கற்றலை ஊக்குவித்துவருகின்றன.

வெறுமனே பள்ளிக்கூடத்தில் குழந்தைகளை உட்கார வைப்பதால் மட்டுமே எந்த இலக்கும் நிறைவேறிவிடாது. பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் கல்வி தரமாக இருப்பதில்தான் குழந்தையின் எதிர்காலம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது. அந்த வகையில் பள்ளிக் கல்வியில் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகள் குறித்து அறிய வேண்டியதும் அவசியமாகிறது. அதற்காக மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் பி.ஜிஐ.-டி (Performance Grading Index for Districts) எனப்படும் "மாவட்டங்களுக்கான செயல்திறன் தர அட்டவணை அறிமுகமானது,

உலகில் பெரியது

உலகிலேயே இந்தியாவின் பள்ளிக் கல்வி முறை மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் பள்ளிகள், 97 லட்சம் ஆசிரியர்கள், பலதரப்பட்ட சமூக பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட 26 கல்வி முறை உள்ளது. இவ்வளவு பெரிய பள்ளிக் கல்வித் துறையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களின் செயல்திறனை மதிப்பிடுவது அவசியமாகிறது. அதற்காக உருவாக்கப்பட்ட 'பிஜிஐ-டி-யில் மாவட்டங்களைப் பட்டியலிட பயனுள்ள வகுப்பறை தொடர்புகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்களின் உரிமைகள், பள்ளிப் பாதுகாப்பு, பாதுகாப்பு. குழந்தைகள் டிஜிட்டல் கற்றல் மற்றும் ஆளுகை செயல்முறை என ஆறு பிரிவுகள் இந்த ஆறு பிரிவுகளின் கீழ் ஏற்படுத்தப்பட்டன. 83 அளவுகோல்களைக் கொண்டுதான் 'பிஜிஐ-டி' வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2019-20ஆம் கல்வி ஆண்டில் 33 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 733 மாவட்டங்கள் 'பிஜிஐ-டி' அட்டவணைக்காகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் அட்டவனை அண்மையில் வெளியானது, 2019-20ஆம் ஆண்டில் முதல் ஐந்து இடங்களை பஞ்சாப், சண்டிகர், தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார் தீவுகள், கேரளா ஆகியவை பிடித்துள்ளன. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்கள் மட்டுமே 2018-19-ஐவிடக் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ளன.

தமிழகம் டாப்

முதல் ஐந்து இடங்களைப் பிடித்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு கல்வி, அணுகல், சமபங்கு, உள்கட்டமைப்பு மற்றும் ஆளுகை செயல்முறைகள் ஆகிய ஐந்து அளவுகோல்களில் நாட்டில் முன்னிலை வகிக்கிறது. 'பிஜிஐ-டி' மொத்த புள்ளிகளில் ஆயிரத்துக்கு 903 புள்ளிகளைத் தமிழ்நாடு பெற்று பெரும் முன்னேற்றத்தைக் காட்டியிருக்கிறது. முந்தைய ஆண்டில் 793 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்த நிலையில், அது 2019-20இல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில்'பிஜிஐ' மாவட்ட அட்டவணையில் சில மாவட்டங்கள் மோசமான கற்றல் விளைவுகளையும் பெற்றிருக்கின்றன.

மாணவர்களுக்கான நகரம் சென்னை!

உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை ஒவ்வோர் ஆண்டும் வெளியாகி வருகிறது. ‘குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' (QS) என்கிற இந்தத் தரவரிசையில் மாணவர்களுக்கான 'சிறந்த நகரங்களின் தரவரிசை' வெளியாகி இருக்கிறது. இதில், சர்வதேச மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் இந்திய நகரங்களாக மும்பை, பெங்களூரு மாநகரங்கள் திகழ்கின்றன. சர்வதேசத் தரவரிசையில் 103ஆவது இடத்தில் மும்பை உள்ளது. மலிவான விலையில் தங்கிப் படிப்பதற்கான பிரிவில் மும்பை அதிக மதிப்பெண் பெற்றுள்ளது. சர்வதேச மாணவர்களுக்கான முதல் 140 நகரங்களில் மும்பை, பெங்களூரு மட்டுமல்லாமல் சென்னை, டெல்லி ஆகிய நகரங்களும் இடம்பிடித்துள்ளன. மும்பையை அடுத்து பெங்களூரு (114ஆவது இடம்), சென்னை (125). டெல்லி (129) ஆகியவை உள்ளன. இந்த ஆண்டு புதிதாக சென்னை, டெய்லி ஆகிய மாநகரங்கள் இதில் இடம்பிடித்துள்ளன. பெற்றிருந்தாலும் 600க்கு 395 புள்ளிகளைப் பெற்றுக் கற்றல் விளைவுகளில் கடைசி பத்து மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. தலைநகர் சென்னையின் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள்கூட முறையே 420, 419 புள்ளிகளைப் பெற்று சென்னையைவிட மேம்பட்டு இருக்கின்றன.

தருமபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் சிறந்த கற்றல் விளைவுகளை வெளிப்படுத்தியுள்ளதாகப் புதிய செயல்திறன் தர அட்டவணையின் அறிக்கை கூறுகிறது. தமிழகத்தில் 27 மாவட்டங்கள் கற்றல்

தொடர்புகள், உள்கட்டமைப்பு வசதிகள், பள்ளிப் பாதுகாப்பு மற்றும் குழந்தைப் பாதுகாப்பு போன்ற பிரிவுகளில் 61 சதவீதம் முதல் 70 சதவீதப் புள்ளிகளைப் பெற்றுள்ளன. டிஜிட்டல் கற்றல் மற்றும் ஆளுகை செயல்முறை, கற்றல் விளைவுகளில் மோசமான புள்ளிகள் பெற்றதன் காரணமாகப் பிற பிரிவுகளில் சிறப்பான புள்ளிகளைப் பெற முடியவில்லை. உதவும் புள்ளிகள்

பெரும்பாலான தமிழக மாவட்டங்கள் உள்கட்டமைப்பில் 50க்கு 40 புள்ளிகளைப் பெற்றுள்ளன. அதே நேரத்தில் பயனுள்ள வகுப்பறை தொடர்புகள் பிரிவில் 90க்கு 80 புள்ளிகளைப் பெற்றுச் சிறப்பான செயல்பாடுகளைத் தமிழக மாவட்டங்கள் காட்டியிருக்கின்றன. பள்ளிப் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் பெரும்பாலான மாவட்டங்கள் 35க்கு புள்ளிகளைப் 35 பெற்றுள்ளன. கிருஷ்ணகிரி, அரியலூர், திருப்பூர் போன்ற மாவட்டங்கள் கற்றல் விளைவுகள், பாதுகாப்புப் பிரிவுகளில் முறையே 290க்கு 104, 84, 86 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளன.

ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட அளவில் உள்ள இடைவெளிகளைக் கல்வித் துறை புரிந்துகொள்ளவும், தங்கள் மாவட்டத்தை அடையாளப்படுத்திக்கொள்ளவுமே இந்தத் தர அட்டவணை முறை மேலும், பரவலாக்கப்பட்ட கல்வி முறையில் அவற்றின் செயல்திறனை மேம்படுத்தவும் இது நிச்சயம் உதவக்கூடும். ஒரு மாவட்டம் எவற்றில் மேம்பட வேண்டும் என்பதையும் புள்ளிகள் மூலம் அறிவதற்கு இது வாய்ட்டாக அமையும். கரோனா பெருந்தொற்றால் இரண்டு ஆண்டுகள் தமிழகம் உள்பட நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போதைய அட்டவணை அதற்கு முந்தையது. இதில், தேசிய அளவில் கற்றல் முடிவுகள், அணுகல், உள்கட்டமைப்பு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதைத் தர

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews