மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் தற்கொலைகள் - குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கூறுவது என்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 26, 2022

Comments:0

மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் தற்கொலைகள் - குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கூறுவது என்ன?

மாணவர்களிடம் அதிகரிக்கும் தற்கொலைகளைத் தடுப்பதற்கு, தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சில முக்கியக் கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரைத்துள்ளது.

சென்னை: கரோனா தொற்றுத்தாக்குதலுக்குப் பின்னர், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. பள்ளிகளில் ஏற்படும் தற்கொலைச்சம்பவங்களை குறைப்பதற்குத் தேவையான ஆலேசானைகளை வழங்கினாலும், கல்வித்துறை அலுவலர்கள் அதனை முழுமையாகப் பின்பற்றாமல் இருக்கின்றனர்.

தற்கொலை, பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பாலியல் குற்றச்சாட்டுகள், தற்கொலைகள் குறித்தும் விசாரணை நடத்தி, அதன் மீதான அறிக்கையை தமிழ்நாடு அரசிற்கும் அளித்து வருகிறது.அடுத்தடுத்த உயிரிழப்புகள்: தமிழ்நாட்டில் சமீபகாலமாக பள்ளியின் விடுதியில் தங்கிப்பயிலும் மாணவிகளின் இறப்பைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனை உளவியலாளரை நியமிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.தற்கொலை தவிர்தற்கொலை தவிர்அதேபோல் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்திலும், விருத்தாசலத்திலும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை குருநானக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கிறபோது, எனக்கு உள்ளபடியே மனவேதனையாக இருக்கிறது.

கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள், அந்தக் கல்வி நிறுவனங்களை தொழிலாக, வர்த்தகமாக நினைக்காமல் தொண்டாக, கல்விச்சேவையாகக் கருத வேண்டும். மாணவர்கள் பட்டங்கள் வாங்குவதற்காக மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு வரவில்லை. முதலில் தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதி ஆகியவற்றை அவர்களுக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.அரசு வேடிக்கை பார்க்காது: எத்தகைய சோதனைகளையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக தமிழ்நாட்டு மாணவர்கள் வளர வேண்டும். உங்களுக்கு ஏற்படும் தொல்லைகள், அவமானங்கள், இடையூறுகள் ஆகியவற்றை மாணவர்கள், அதிலும் குறிப்பாக மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மாணவிகளுக்குப் பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தொல்லை தரும் எத்தகைய இழிசெயல் நடந்தாலும், தமிழ்நாடு அரசு நிச்சயமாக சொல்கிறேன், வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. உறுதியான நடவடிக்கை எடுக்கும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உடனடியாக அதற்குரிய தண்டனை பெற்றுத் தரப்படும்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுஎந்தச் சூழலிலும் தற்கொலை எண்ணத்துக்கு மாணவிகள் தள்ளப்படக்கூடாது. இந்த இடத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றால், எத்தனையோ சோதனைகளைக்கடந்துதான் இங்கே நீங்கள் வந்திருக்கிறீர்கள். சோதனைகளைச் சாதனைகள் ஆக்கி வளர்ந்தாக வேண்டும். தமிழ்நாட்டு மாணவ-மாணவியர் அறிவுக்கூர்மை கொண்டவர்களாக மட்டுமல்லாமல், உடலுறுதியும் மனதைரியமும் கொண்டவர்களாக வளர வேண்டும்.

இதுதான் என்னுடைய ஆசை; என்னுடைய கனவு. அத்தகைய கல்வியை, அறிவை, ஆற்றலை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். படிப்போடு கல்வி நிறுவனங்களின் பணி முடிந்துவிடவில்லை. பாடம் நடத்துவதோடு ஆசிரியர்களின் பணியும் முடிந்துவிடுவதில்லை. குழந்தைகளைப்பெற்றதோடு பெற்றோரின் பணி எப்படி முடியாததோ, அதுபோல படிப்போடு ஆசிரியர் பணி முடிந்துவிடாது.மாணவர்களுக்கு, தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. தலைநிமிரும் எண்ணம் தான் இருக்க வேண்டும். உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை கூடாது. உயிர்ப்பிக்கும் சிந்தனையே தேவை. ஆசிரியர்களாக இருந்தாலும், பெற்றோர்களாக இருந்தாலும் மாணவ, மாணவியரிடம் மனம் விட்டுப்பேசுங்கள்.

மாணவர்களும், உங்களுடைய பிரச்னைகளையும், நோக்கங்களையும், கனவுகளையும் பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்” எனக் கூறினார்.பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை: தொடர்ந்து தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கூட்டம், அதன் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனை உளவியலாளர் நியமிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யவுள்ளனர். மேலும் இது குறித்து தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறுகையில், “கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடர்ந்து ஆணையத்தின் உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் குழந்தைகளுக்கு எழும் பிரச்னைகளை பள்ளியின் ஆசிரியர்களிடம் கூற முடியாத நிலை இருக்கிறது.எனவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு, ஒவ்வொரு பள்ளியிலும் ஆலேசானை உளவியலாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். முறையாக உளவியல் கூறித்து படித்தவர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. உளவியல் ஆலோசகர்தான் முழுமையாக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை வழங்க முடியும்.

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி பேட்டிகள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை செய்ய தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் நாளையும் ஆய்வு செய்ய உள்ளோம்” எனத்தெரிவித்தார். அதேபோல் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினரும், கல்வி உளவியல் ஆலோசகருமான சரண்யா ஜெயக்குமார், “பள்ளிகளில் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு முதல் காரணம், 14 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும் எனப் பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. அடுத்ததாக பெற்றோர் தங்களின் விருப்பங்களை குழந்தைகளிடம் திணிப்பது காரணம் ஆகிறது. குழந்தைகளை டாக்டர் ஆக்க வேண்டும், ஐஏஎஸ் ஆக்க வேண்டும் என திணிப்பதுடன், தங்களின் உறவினர்கள் மற்றும் சமுதாயத்தில் மதிப்பு இருக்காது எனக் கூறுவதும் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மனம் விட்டுப்பேச வேண்டும்:

பள்ளியில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் மாணவர்கள் தொடர்ந்து படிக்க வைப்பதால், மன அழுத்தம் ஏற்படுகிறது. அவர்கள் வேறு எந்த மகிழ்ச்சியான செயலிலும் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை. மாணவர்களிடையே ஒரு மாணவரை சரியாகப் படிக்காமல் இருப்பதால், ஒதுக்கி வைப்பதாலும், மாணவர்களுக்குத் தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படுகிறது.மாணவர்களை எக்ஸாம் நோக்கி கொடுக்கப்படும் அழுத்தமும் காரணமாக அமைகிறது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் மீது தேவையில்லாமல் அழுத்தம் தரக் கூடாது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகளில் உள்ள விடுதிகளையும் 2014ஆம் ஆண்டு முதல் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். தனியார் பள்ளிகளில் செயல்படும் விடுதிகளைப் பதிவு செய்து கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. தற்போது ஒரு சில பள்ளிகளில் ஏற்பட்ட பிரச்னையால் விடுதிகளை நடத்தும் பள்ளிகள், மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்ய முன்வந்துள்ளது.தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார் பேட்டிமாணவிகள் மட்டும் இல்லாமல் மாணவர்களும் மன அழுத்தத்தில்தான் இருக்கின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு பெற்றோர், தங்களின் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். குழந்தைகளிடம் பெற்றோர் வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்பட்ட தோல்விகள் குறித்தும், அவற்றில் இருந்து எவ்வாறு வெற்றி பெற்றோம் என்பது குறித்தும் எடுத்துக்கூற வேண்டும். வெற்றி அடைந்த கதைகளை மட்டும் கூறாமல், தோல்வி அடைந்த கதைகளையும் கூறி தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். கரோனா தொற்றுப் பாதிப்பிற்குப்பின்னர் மனதளவிலும், பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் கரோனா தொற்றின்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக பாடங்களை படிக்காமல் இருந்ததால், மறந்து இருக்கின்றனர்.7ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுகின்றனர். இதனாலும் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. பள்ளிகளில் மாணவர்கள் தங்கிப்படிப்பதற்கு ஏற்படுத்தப்படும் விடுதிகளில், பெற்றோர்களைப்போல் மாணவர்களை பாதுகாக்கும் வகையில் அனுபவம் வாய்ந்தவர்களை நியமித்து, பராமரிக்க வேண்டும்” எனக் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews