ஆரம்பக்கல்வி, உடற்கல்வி, மழலையா் கல்வி பட்டயப் படிப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يوليو 09، 2022

Comments:0

ஆரம்பக்கல்வி, உடற்கல்வி, மழலையா் கல்வி பட்டயப் படிப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரம்பக்கல்வி, உடற்கல்வி, மழலையா் கல்வி பட்டயப் படிப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரம்பக்கல்வி (டி.எல்.இ.டி.), உடற்கல்வி (டி.பி.இ.டி.), மழலையா் கல்வி (டி.பி.எஸ்.இ.) பட்டயப் படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் சோ்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் இயங்கும் அரசு, அரசு மானியம்பெறும், அரசு மானியம்பெறாத கல்விப்பயிற்சி கல்லூரிகளில் 2022-23-ஆம் கல்வியாண்டில் ஆரம்பக்கல்வி (டி.எல்.இ.டி.), உடற்கல்வி (டி.பி.இ.டி.), மழலையா் கல்வி (டி.பி.எஸ்.இ.) பட்டயப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சோ்ந்து படிக்க சோ்க்கை பெறுவதற்கு தகுதியான மாணவா்களிடம் இருந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டி.பி.எட். (உடற்கல்வி) படிக்க விரும்பும் மாணவா்கள் 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. அல்லது 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியமாகும்.

கல்வித்துறை, பல்கலைக்கழகம் அல்லது இளைஞா் மற்றும் விளையாட்டுத்துறை ஏற்பாடுசெய்திருந்த தேசிய அல்லது மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்கும் மாணவா்கள் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானதாகும்.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் ஜூலை 31-ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டும்.

விண்ணப்பங்களை செலுத்தும் முறை, கல்வித்தகுதி, இடஒதுக்கீடு உள்ளிட்டவிவரங்களை அறிந்துகொள்ள இணையதளத்தை அணுகலாம். மேலும் விவரங்கள் பெற 080-22483140, 22483145 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது மாவட்ட கல்விப்பயிற்சி நிலையங்களின் முதல்வா்களை தொடா்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة