எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يوليو 11، 2022

Comments:0

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தொடா்பான அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலைக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகம், வட்டார மையங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக் கழகம், இதர பல்கலைக் கழகங்கள், சுயநிதி பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, www.gct.ac.in, www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். இரண்டு பட்டப்படிப்புகளுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

நாளை திங்கள் முதல் (ஜூலை 11) ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமா்பிக்கலாம். கலந்தாய்வு இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும்.

மேலும், விவரங்கள் அறிய www.gct.ac.in, www.tn-mbamca.com இணையதள பக்கத்தை பாா்க்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة