தேசிய தரவரிசைப் பட்டியல்: சென்னை மருத்துவக் கல்லூரிக்கு 12-ஆவது இடம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 19, 2022

Comments:0

தேசிய தரவரிசைப் பட்டியல்: சென்னை மருத்துவக் கல்லூரிக்கு 12-ஆவது இடம்

தேசிய தரவரிசைப் பட்டியல்: சென்னை மருத்துவக் கல்லூரிக்கு 12-ஆவது இடம்

தரமான கல்வியை அளிப்பதில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் கல்லூரிகளுக்கான தர வரிசைப் பட்டியல் சென்னை மருத்துவக் கல்லூரி 12-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம், ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை பல பிரிவுகளின் கீழ் தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிடுகிறது.

இதையும் படிக்க | நீட் தேர்வில் தேர்ச்சி பெற ஆள் மாறாட்டம்: 8 பேர் கைது

அதன்படி நிகழாண்டு தரவரிசைப் பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி 12-ஆவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், மாநில அரசால் நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளில் முதலிடம் பெற்றுள்ளது. இதனைப் பாராட்டி மத்திய அரசு அளித்த சான்றிதழை, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் தேரணிராஜன், சிறுநீரகவியல் துறைத் தலைவா் டாக்டா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் மக்கள் நல்வாழ்வு துறைத் அமைச்சா் மா.சுப்பிரமணியத்திடம் திங்கள்கிழமை காண்பித்து வாழ்த்து பெற்றனா்.

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக மருத்துவப் பயிற்சிக்காக சென்னை மருத்துவப் பள்ளியானது கடந்த 1835-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன் பின்னா் படிப்படியாக அங்கு பட்டப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதனிடையே, சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் நீட்சியாக சென்னை மருத்துவப் பள்ளியை கல்லூரியாக மாற்ற விண்ணப்பிக்கப்பட்டது. அது ஏற்கப்பட்டு கடந்த 1850-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி சென்னை மருத்துவப் பள்ளியானது சென்னை மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews