ஐஏஎஸ், ஐபிஎஸ், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இயங்கி வரும் பெரியார் ஐஏஎஸ் அகாடமியில் யுபிஎஸ்சி எனப்படும் இந்திய ஆட்சிப் பணியாளர்கள் தேர்வாணையம், மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்1 தேர்வு உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளில் பங்கேற்க உள்ள மாணவ, மாணவியரை தயார் செய்யும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
மேலும், போட்டித் தேர்வுகளில் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகள், நேர்முகத் தேர்வு ஆகிய நிலைகளில் மாணவர் எப்படி தேர்வு செய்யப்படுகின்றனர், விருப்ப பாடம் தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட மாணவர்களின் சந்தேகங்களை நீக்க வல்லுநர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர். இந்நிலையில், ஆட்சிப் பணி தேர்வுக்கு வழிகாட்டும் இலவச பயிற்சி முகாம் 10ம் தேதி காலை 10.30 மணிக்கு பெரியார் திடலில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் நடக்க உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற விரும்பும் மாணவ, மாணவியர் இந்த இலவச பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம். இதுதொடர்பான விவரங்கள் வேண்டுவோர் 044-26618056, 9940638537 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.