புலனாய்வு துறையில் (IB) 766 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 11, 2022

Comments:0

புலனாய்வு துறையில் (IB) 766 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்த ஆண்டுக்கான வேலைவாய்ப்பாக புலனாய்வுப் துறையானது (IB) குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவுகளின் கீழ் உள்ள அதிகாரிகளின் பதவிக்கு விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ஏசிஐஓ), செக்யூரிட்டி அசிஸ்டென்ட் (எஸ்ஏ), ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் (ஜிஐஓ) ஆகிய பணிகளுக்கான 750-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பதவிகளுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 19, 2022 என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதவிகளுக்கான பதவிக்காலம் ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின்படி, விளம்பரப்படுத்தப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை தற்காலிகமானது என்றும் தேர்வின் போது இது அதிகரிக்கலாம் அல்லது குறையவும் செய்யலாம் என்று கூறியுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் இடமாற்றம் செய்யப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான தகுதி மற்றும் பிற விவரங்களை இனி தெரிந்து கொள்வோம்.

தகுதி :

மத்திய காவல் அமைப்புகள், மாநில காவல்துறை அமைப்புகள் அல்லது பாதுகாப்புப் படைகளின் அதிகாரிகள், பெற்றோர் கேடர் அல்லது துறைகளில் தொடர்புடைய அனுபவம் கொண்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் ஒவ்வொரு பதவிகளுக்கும் அதன் அடிப்படையில் சில தகுதிகளும் உள்ளன என்று தெரிவித்துள்ளனர். சம்பளம் :

இந்த அறிவிப்பின் படி, ஒவ்வொரு பதவி நிலைகளுக்கும் ஒவ்வொரு சம்பள அளவுகோள் உள்ளது. உதவி மத்திய புலனாய்வு அதிகாரி-I 8ம் நிலைக்கு 7வது CPC-இன் படி ரூ.47,600-ரூ.1,51,100 வரை சம்பளம் அறிவித்துள்ளனர். உதவி மத்திய புலனாய்வு அதிகாரி-II/எக்ஸிகியூட்டிவ் நிலை 7 இல் உள்ளவர்களுக்கு ரூ. 44,900-1,42,400 வரை நிர்ணயித்துள்ளனர். ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர்-I/எக்ஸிகியூட்டிவ் நிலை 5ல் உள்ளவர்களுக்கு 7வது CPC-இன் படி ரூ.29,200-ரூ92,300 என சம்பளம் உள்ளது.

ஜூனியர் இன்டெலிஜென்ஸ் அதிகாரி-II/எக்ஸிகியூட்டிவ்களுக்கு 7வது CPC-இன் படி ரூ. 25,500- 81,100 என சம்பளம் குறிப்பிடப்பட்டுள்ளது. செக்யூரிட்டி அசிஸ்டென்ட்/எக்ஸிகியூட்டிவ் நிலை 3 பதவிகளுக்கு 7வது CPC இன் படி ரூ.21,700 - 69,100 சம்பளம் பெறுவார்கள். ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர்-I மோட்டார் டிரான்ஸ்போர்ட் 7வது CPC படி ரூ. 2800 தர ஊதியத்துடன் ரூ. 5200-20200 வரை சம்பளம் பெறலாம். செக்யூரிட்டி அசிஸ்டென்ட் நிலை 3ல் உள்ளவர்கள் 7வது CPC இன் படி ரூ.21700-69100 சம்பளம் பெறுவார்கள். இப்படி ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ப சம்பள அளவுகோல்கள் மாறுபடலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள அதிகாரிகள் பயோ-டேட்டாவை முறையாக பூர்த்தி செய்து விண்ணப்பதாரரால் கையொப்பமிடப்பட்டு, அவர்களுடைய கல்வி மற்றும் பயிற்சி சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களுடன், உதவி இயக்குநர்/ஜி-3, உளவுத்துறை பணியகம், உள்துறை அமைச்சகம், 35 எஸ் பி மார்க், பாபு தாம்,புதுடெல்லி-110021 என்கிற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், இதில் அனுப்பப்படும் அனைத்து விவரங்களும் உண்மைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews