இலவசமாக 23 ஆயிரம் உயர்கல்விப் பாடப் பிரிவுகள்: யுஜிசி புதிய அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 20, 2022

Comments:0

இலவசமாக 23 ஆயிரம் உயர்கல்விப் பாடப் பிரிவுகள்: யுஜிசி புதிய அறிவிப்பு

செயற்கை நுண்ணறிவு(ஏஐ),சைபர் பாதுகாப்பு, குழந்தைப் பராமரிப்பு உள்ளிட்ட 23 ஆயிரம் உயர்கல்விப் பாடப்பபிரிவுகள், படிப்புகள் இலவசமாக புதிய வெப் போர்டலில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல்கிடைக்கும் என்று பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு(ஏஐ),சைபர் பாதுகாப்பு, குழந்தைப் பராமரிப்பு உள்ளிட்ட 23 ஆயிரம் உயர்கல்விப் பாடப்பபிரிவுகள், படிப்புகள் இலவசமாக புதிய வெப் போர்டலில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல்கிடைக்கும் என்று பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) தெரிவித்துள்ளது.

தேசியக் கல்விக்கொள்கை நாட்டில் கொண்டுவரப்பட்டு 2-வது ஆண்டு இன்று தொடங்குகிறது. இதையடுத்து, புதிதாக 23 ஆயிரம் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டில் தகவல் தொடர்பு இல்லாத, தொலைவில் இருக்கும் மக்களுக்கும் உயர் கல்விப்படிப்பு சாத்தியமாக வேண்டும், டிஜி்ட்டல் கல்வி சென்று சேர வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய போர்டல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த போர்டலுக்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துடன் இணைந்து யுஜிசி செயல்படுகிறது. இதனால் நாட்டில் 7.50 லட்சம் பொதுச்சேவை மையங்கள், சிறப்பு பயன்பாடு வாகன மையங்களில் இந்த படிப்புகள் அடுத்த கல்வியாண்டு முதல் கிடைக்கும்.

யுஜிசி தலைவர் எம். ஜெகதீஸ் குமார் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ அனைத்து பிரிவினருக்கும் உயர் கல்வி சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. மாணவர்களகுக்கு ஆங்கிலத்திலும்,பிராந்திய மொழிகளிலும் டிஜிட்டல் தொடர்பான விஷயங்கள் கிடைப்பதில் யுஜிசி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் நோக்கமே, டிஜிட்டல் வசதி மற்றும் மின்னணு நிர்வாக சேவை கிராமங்களில் வாழும் அனைத்து மக்களுக்கும் வீடுகளுக்கே கிடைக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாகும்.

பொதுச்சேவை மையங்கள், சிறப்பு மையங்கள் அந்தந்த கிராமங்களில் உள்ள தொழில் முனைவோரால் இயக்கப்படுகின்றன. ஆன்லைன் சேவைகளை வழங்குவதன் மூலம் கிடைக்கும் வருவாயில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த திட்டத்தில் 23 ஆயிரம் முதுநிலை படிப்புகள் உள்ளன. 137 ஸ்வயம் ஆன்லைன் படிப்புகள் 25பொறியியல் அல்லாத ஸ்மயம் படிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த படிப்புகளை அனுகுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.

அனைத்துப் படிப்புகளும் இலவசமாக நடத்தப்படும். இந்த சேவையைப் பெறுவதற்காக பொதுச்சேவை மையங்களுக்கு தினசரி ரூ.20 கட்டணமாகவும், ரூ.500 மாதக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும். இது கிராமங்களில் உள்ள தொழில்முனைவோர்களுக்கு கிடைக்கும் வருவாயாகும்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா, பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனா, இ-ஷ்ரம்,, பான் கார்டு, பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா உள்ளிட்ட திட்டங்களைப் போன்றதுதான். இவ்வாறு ஜெகதீஸ் குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews