2021-2022ஆம் கல்வியாண்டிற்கான சிறப்பு ஊக்கத் தொகை - 23 முதன்மைக் கல்வி அலுவலர்கள் விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 12, 2022

Comments:0

2021-2022ஆம் கல்வியாண்டிற்கான சிறப்பு ஊக்கத் தொகை - 23 முதன்மைக் கல்வி அலுவலர்கள் விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

பள்ளிக் கல்வி - 2021-2022ஆம் கல்வியாண்டு மாணவ, மாணவியர் இடைநிற்றலை முற்றிலும் தவிர்த்தல் - சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - அரசு/அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் (சுயநிதிப் பிரிவு நீங்கலாக) 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர் - வங்கி கணக்கு விவரங்கள் கோருதல் EMIS இணையதளத்தில் பதிவு செய்தல்-தொடர்பாக.

பார்வை (2)ல் கண்டுள்ள செயல்முறைகளின் மீது அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களின் நேரடி தனிக்கவனம் ஈர்க்கப்படுகிறது. அதில் 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 11,12 வகுப்பு (சுயநிதிப் பாடப் பிரிவு நீங்கலாக) பயின்ற மாணவ, மாணவியரின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ஏதுவாக பார்வை(2)ல் கண்டுள்ள 18.04.2022 நாளிட்ட கடிதத்துடன் இணைத்தனுப்பப்பட்ட படிவங்கள்(I,II,III) மாணவர்களின் வங்கி சேமிப்பு கணக்கு விவரங்களை பூர்த்தி செய்து 26.04.2022 மற்றும் 15.06.2022க்குள் jdvocational@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது.

அதில் கீழ்க்காணும் முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்து மட்டுமே பார்வை(2)ல் கண்டுள்ள கடிதத்துடன் இணைத்தனுப்பப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை சார்பாக கோரப்பட்ட விவர படிவங்களில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியரின் வங்கி சேமிப்பு கணக்கு விவரங்கள் பெறப்பட்டுள்ளது (தர்மபுரி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, வேலூர், விருதுநகர் மற்றும் இராணிப்பேட்டை). எனவே, பார்வை(2)ல் கண்டுள்ள கடிதத்துடன் இணைத்தனுப்பப்பட்ட படிவத்தில் மாணவ, மாணவியரின் வங்கி சேமிப்பு கணக்கு விவரங்களை உரிய ஆவணங்களின் அடிப்படையில் Excel Sheet-ல் தவறின்றி பதிவு செய்து 15.07.2022-க்குள் jdvocational@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை (Hard Copy) இணை இயக்குநர் (தொழிற்கல்வி), பள்ளிக்கல்வி ஆணையரகம், சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு, மேலும் பார்வை (2)ல் கண்டுள்ள 18.04.2022 நாளிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை (Instructions) பின்பற்றி 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு 2021-2022 கல்வியாண்டில் பயின்ற மாணவ மாணவியரின் வங்கி சேமிப்பு கணக்கு விவரத்தினை EMIS Web Portal-ல் 28.07.2022க்குள் பிழையின்றி பதிவு செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் தவறு ஏற்படும் நிகழ்வுகளுக்கு சார்ந்த தலைமை ஆசிரியர்களே முழுப் பொறுப்பேற்க நேரிடும் என அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews