வாடிக்கையாளர் கவனத்திற்கு.. இந்த மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 02, 2022

Comments:0

வாடிக்கையாளர் கவனத்திற்கு.. இந்த மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை..!

இந்த மாதத்தில் (ஜூலை) பல்வேறு பொது பண்டிகைகள் மற்றும் விழாக்கள் வருவதையொட்டி, சனி, ஞாயிறு விடுமுறையையும் சேர்த்து மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை காலண்டர் படி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், இந்த விடுமுறை காலம் மாநிலங்களுக்கு, மாநிலம் வேறுபடும் என்றாலும் பொது விடுமுறைகள் அனைத்திலும் அனைத்து மாநில வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை காலண்டர் படி விடுமுறைப் பட்டியல்:

ஜூலை ஒன்றாம் தேதி (இன்று) நடைபெறும் ரதயாத்திரையை முன்னிட்டு ஒடிசா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கும், கர்ச்சி பூஜையை முன்னிட்டு ஜூலை 7-ம் தேதி திரிபுரா மாநில வங்கிகளுக்கும், இட் உல் அஸாவை முன்னிட்டு ஜம்மு & காஷ்மீர் வங்கிகளுக்கு ஜூலை 11-ம் தேதியும், பானு ஜெயந்தியை முன்னிட்டு ஜூலை 13-ம் தேதி சிக்கிம் மாநில வங்கிகளுக்கும், பெ தியன்க்லாமை முன்னிட்டு ஜூலை 14-ம் தேதி மேகாலயா மாநிலத்திற்கும், ஹரேலாவை முன்னிட்டு ஜூலை 16-ம் தேதி உத்தரகாண்ட் வங்கிகளுக்கும், கெர் பூஜாவை முன்னிட்டு ஜூலை 26-ம் தேதி திரிபுரா மாநில வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவைகள் இல்லாமல், இரண்டாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறை ஆகியவையும் வருவதால் வங்கிகள் 14 நாட்கள் செயல்படாது என்றும், விடுமுறை நாட்களில் அக்கவுண்ட் க்ளோஸ் செய்யப்பட்டிருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறைகள் வருவதால் பண பரிவர்த்தனைகளை செய்ய விரும்புவர்கள் முன்பே திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு வங்கிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு தான் விடுமுறை என்றாலும் ஆன்லைன் சேவை தொடர்ந்து செயல்படும்.

பெரும்பாலான வங்கி சார்ந்த பணிகள் தற்போது ஆன்லைன் மூலமாக செய்யப்பட்டு வரும் நிலையில், வங்கிக்கு நேரடியாகச் சென்று சேவைகளைப் பெறுபவர்களுக்கு மட்டுமே இது இடையூறாக இருக்கும்.

விடுமுறைக்குப் பிறகு வங்கிகள் திறக்கப்படும் போது கூட்டம் அலைமோதும் என்பதால், முன்கூட்டியே வங்கி பணிகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews