இல்லம் தேடிக் கல்வி - Reading Marathon வாசிப்பு போட்டியில் வெற்றி பெற்ற ஒன்றியங்கள் பட்டியல் வெளியீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يونيو 14، 2022

Comments:0

இல்லம் தேடிக் கல்வி - Reading Marathon வாசிப்பு போட்டியில் வெற்றி பெற்ற ஒன்றியங்கள் பட்டியல் வெளியீடு.



இல்லம் தேடிக் கல்வி மையங்களில் ஜூன் 1 முதல் ஜுன் 12 வரை மாணவர்களுக்கு Reading Marathon வாசித்தல் பயிற்சிக்கான போட்டி நடத்தப்பட்டது.

Reading Along என்ற ஆப் மூலமாக Google நிறுவனத்துடன் இணைந்து பள்ளிக் கல்வித்துறை நடத்திய இந்த Marathon போட்டியில் விடுமுறை நாட்களிலும் ஆயிரக்கனக்கான மாணவர்கள் தமிழகத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் பங்கேற்றனர்.

இதில் அதிகமான வார்த்தைகளை சரியாக வாசிக்கும் ஒன்றியங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு தினந்தோறும் Ranking List ஒன்றியவாரியாக வெளியிடப்பட்டுவந்தது. இறுதில் தமிழக அளவில் வெற்றிபெறும் ஒன்றியத்துக்கு பரிசுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்நிலையில் நேற்றுடன் இந்த போட்டி நிறைவடைந்த நிலையில் முன்னிலை பெற்ற ஒன்றியங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

413 வட்டாரங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டாரம் 62.82 இலட்சம் சொற்களைச் சரியாக வாசித்து முதலிடம் பெற்றுள்ளது.

அடுத்ததாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் ( 49.19 இலட்சம் ) மற்றும் மேலூர் வட்டாரம் ( 41.72 இலட்சம் ) ஆகியவை இரண்டாவது மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன

CLICK HERE Reading Marathon State Level Final List

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة