NEET UG 2022: தேர்வு மையங்கள் ஒதுக்கீடு விவரங்கள் (City Intimation Slip) வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يونيو 30، 2022

Comments:0

NEET UG 2022: தேர்வு மையங்கள் ஒதுக்கீடு விவரங்கள் (City Intimation Slip) வெளியீடு

இது, நீட் நுழைவுச் தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகள் இல்லை என்றும் அனுமதிச் சீட்டு பின்னர் வெளியிடப்படும் என்றும் தேர்வு முகமை தனது அறிவிப்பில் தெரிவித்துளளது.

NEET UG 2022: இளநிலை மருத்துவ படிப்பு நீட் தேர்வு மையங்களுக்கான அறிவிப்புச் சீட்டு (City Intimation Slip) வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இருக்கும் மையங்களில் இந்த தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துளளது.

தேர்வு மையங்களுக்கான அறிவிப்புச் சீட்டை https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நடப்பு ஆண்டிற்கான இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் ஜுலை 17ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்வு மையங்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புச் சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. எந்தெந்த நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பான விவரங்கள் மட்டும் இதில் இடம் பெற்றிருக்கும் .

இது, நீட் நுழைவுச் தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகள் இல்லை என்றும் அனுமதிச் சீட்டு பின்னர் வெளியிடப்படும் என்றும் தேர்வு முகமை தனது அறிவிப்பில் தெரிவித்துளளது.

இது தொடர்பான தகவல் விண்ணப்பதாரர்களின் அலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, தேர்வு நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக அனுமதிச் சீட்டு வெளியிடப்படும். எனவே, ஜுலை முதல் வாரத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் அனுமதிச் சீட்டு வெளியிடப்படலாம்.

இதற்கிடையே, ஜேஈஈ மெயின் தேர்வு, இளநிலை பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு(CUET-UG), தெலுங்கானா பொறியியல் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஆகிய தேர்வுகளின் தேதிகள் நீட் தேர்வுக்கு அடுத்தடுத்து வருவதால் நீட் தேர்வுக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று நீட் விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். முன்னதாக, சமூக ஊடகங்களில் நீட் தேர்வு செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக வெளியான தகவல் போலியானது என தேசிய தேர்வு முகமை தெளிவுபடுத்தியது.

நீட் தேர்வை ஒத்திவைக்கப்படுவது தொடர்பாக இதுநாள் வரை முடிவு எடுக்கப்படாததால், திட்டமிட்டப்படி ஜுலை 17ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது.

அடுத்தடுத்த தேர்வுகளால் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ள விண்ணப்பதாரர்கள், அதற்கேற்றவாறு தங்களை தயார்படுத்திக் கொள்வது அவசியமானதாகிறது.

தேசிய தேர்வு முகமையின் www.nta.ac.in, ntaneet.nic.in ல் வெளியாகும் வெளியாகும் தகவல்களை மட்டும் அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة