என்ன, மத்திய அரசு ஊழியர்கள் இனி இதையெல்லாம் பயன்படுத்தக் கூடாதா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 18, 2022

Comments:0

என்ன, மத்திய அரசு ஊழியர்கள் இனி இதையெல்லாம் பயன்படுத்தக் கூடாதா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு அனுப்பியிருக்கும் அறிவுறுத்தலில், கூகுள் டிரைவ், விபிஎன் உள்ளிட்ட சில இணைய வசதிகளை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் சில ரகசிய ஆவணங்கள் வெளியில் கசியாமல் தடுக்கும் வகையில், பல முக்கிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்கள் தங்களது அலுவலகக் கணினியில் விபிஎன், டிராப்பாக்ஸ், கூகுள் டிரைவ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

அரசு அலுவலகக் கணினிகளில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய மற்றும் ரகசியம் காக்கப்பட வேண்டிய மத்திய அரசின் ஆவணங்களை இவற்றில் சேமித்து வைக்கக் கூடும் என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோல விபிஎன் போன்ற சேவைகளாலும் அரசின் ரகசிய ஆவணங்கள் கசியும் ஆபத்து நேரிடும் என்று கூறப்படுகிறது.

அது மட்டுமல்ல, மத்திய அரசு ஊழியர்கள், அலுவலக ஆவணங்களை கேம்ஸ்கேனர் போன்ற மூன்றாம்நபர் ஆப்ளிகேஷன்கள் போன்றவற்றையும் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசின் ஆவணங்களை ஸ்கேன் செய்து பயன்படுத்தும் அல்லது வெளியிடும் அபாயம் இருப்பதால் இதற்கும் தடை வந்துள்ளது.

மேலும், மத்திய அரசு அலுவலர்கள், ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகளை ரூட் செய்வதற்கும், ஜெயில்பிரேக் செய்வதற்கும் கூட தடை விதிக்கப்படுகிறது.

இவையெல்லாம், மத்திய அரசின் அலுவலக மற்றும் ரகசிய ஆவணங்கள் வெளியில் கசியாமல் இருக்க முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் இணைய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை, அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் ஒன்றுபோல கடைபிடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews