மாநில கல்விக்கொள்கை தயாரிக்க உயர்மட்ட குழு: அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 03, 2022

Comments:0

மாநில கல்விக்கொள்கை தயாரிக்க உயர்மட்ட குழு: அரசாணை வெளியீடு

Tamil Nadu School Education Secretary Gokarla Usha said in a statement that the Minister of Finance and Human Resource Management, who addressed the budget session on August 13, 2021, had directed the government to set up a high-level committee comprising academics and experts to formulate the state education policy for Tamil Nadu. Following that, Chief Minister MK Stalin announced the names of the chairman and members of the high-level committee last April.


Accordingly, the high-level panel will be chaired by former Delhi High Court judge Murugesan. Among the members are former Vice Chancellor of Savita University Vander L. Jawahar Nasan, former Professor of Mathematics Ramanujam of the Institute of Mathematical Sciences in Chennai, State Planning Commission members Prof. Sultan Ismail, Prof. Rama Seenuvasan, former UNICEF educator Arunaratnam, writer Ramakrishnan and chess player Viswanathan Anan. M. Krishna, Educator Tulsidas, Writer Madasamy, Nagapattinam District Keechanguppam Panchayat Union School Headmaster Balu, Agaram Trust's Jayasree Damodaran have been appointed. In addition, the Director of Matriculation Schools will be the Member Secretary and will chair the meetings of this high-level committee. This committee will prepare the state education policy considering the future of Tamil Nadu and the education of the youth. Course teachers and educators should make comments and corrections based on existing technology and modern developments, including reforms in elementary, intermediate, high school and Manila college courses, changes in education worldwide, and education with employment, as well as amendments to the appointments of teachers and professors.


The report will include features on ensuring the opportunity for students to drop out of school to pursue higher education and outline ways for higher education institutions to improve quality education. The High Level Committee is required to submit a final report to the Government within one year of its announcement. This high-level committee is also empowered to set up a subcommittee under it when formulating state education policy. This was stated by the school education secretary Gokarla Usha in the government. மாநில கல்விக்கொள்கை


தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2021 ஆகஸ்ட் 13ம்தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசிய நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர், தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை அரசு அமைக்கும் என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஏப்ரல் மாதம், உயர்மட்டக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெயர்களை அறிவித்தார்.


அதன்படி, உயர்மட்டக் குழுவின் தலைவராக டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் இருப்பார். உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் எல்.ஜவகர் நேசன், சென்னை தரமணியில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் கணித பேராசிரியர் ராமானுஜம், மாநில திட்டக்கமிஷன் உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் ராம சீனுவாசன், யுனிசெப் நிறுவனத்தின் முன்னாள் கல்வியாளர் அருணாரத்னம், எழுத்தாளர் ராமகிருஷ்ணன், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், பாடகர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், எழுத்தாளர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சங்குப்பம் ஊராட்சி ஒன்றிய பள்ளித் தலைமை ஆசிரியர் பாலு, அகரம் அறக்கட்டளையின் ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசாணை வெளியீடு


இதுதவிர மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர், உறுப்பினர் செயலராக இருந்து இந்த உயர்மட்ட குழுவின் கூட்டங்களை நடத்துவார். இந்த குழு, தமிழகத்தின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் கல்வியை கருத்தில் கொண்டு மாநில கல்விக் கொள்கையை தயார் செய்யும். தற்போதுள்ள தொழில்நுட்பம் மற்றும் நவீன வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு பாட ஆசிரிர்கள் மற்றும் கல்வியாளர்கள் வெளியிடும் கருத்துகளையும் திருத்தங்களையும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலை கல்லூரி படிப்புகளில் வேண்டிய சீர்திருத்தங்களையும், உலகளவில் கல்வியில் மாற்றத்தையும், வேலைவாய்ப்புடன் கூடிய கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும், தேர்வுகளில் வேண்டிய சீர்திருத்தங்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் நியமனங்களில் வேண்டிய திருத்தங்கள் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும்.


பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவ, மாணவியர் உயர்கல்விக்கும் வாய்ப்பை உறுதி செய்வதற்கான அம்சங்கள் இடம்பெறுதல், உயர்கல்வி நிறுவனங்கள் தரமான கல்வியை மேம்படுத்துவதற்கான வழிகளை தெரிவித்தல் ஆகியவற்றை கொண்ட அறிக்கை தயார் செய்யும். இந்த உயர்மட்டக் குழு அறிவிக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் இறுதி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். மாநில கல்விக் கொள்கையை தயாரிக்கும் போது இந்த உயர் மட்டக் குழு, தனக்கு கீழ் ஒரு துணைக் குழுவை அமைத்துக் கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு பள்ளிக் கல்வி செயலாளர் காகர்லா உஷா அரசாணையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews