''தமிழக அரசு துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வேலையின்மை பிரச்னையை தீர்க்க வேண்டும்,'' என, அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆ.செல்வம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். 2019 ஆக., நிலவரப்படி அங்கு பதிவு செய்து காத்திருப்போரில் 24 வயதிற்கு மேற்பட்டவர்கள் 40 லட்சம் பேர். இந்தியாவில் அவ்வாறு காத்திருப்பவர்கள் 15 கோடியை நெருங்கி கொண்டிருக்கிறது, என ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு இல்லாமல் 20 கோடி பேர் உள்ளனர்.
தமிழக அரசின் துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. வேலை வாய்ப்பற்ற இளைய தலைமுறைகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் விதமாக காலிப்பணியிடங்களை அரசு நிரப்பிட வேண்டும். அரசு துறைகளில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட் குறைப்பினை கைவிட வேண்டும். முதல்வர் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், என்றார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.