ஐவகைக் கலைகளில் மாநில அளவில் கலைப்போட்டிகள் - கலை பண்பாட்டுத்துறை - 29-06-2022 [Press Release No : 1067 ] - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 29, 2022

Comments:0

ஐவகைக் கலைகளில் மாநில அளவில் கலைப்போட்டிகள் - கலை பண்பாட்டுத்துறை - 29-06-2022 [Press Release No : 1067 ]

செய்தி வெளியீடு எண் :1067

கலை பண்பாட்டுத்துறை

நாள்: 29.06.2022

இளங்கலைஞர்களிடையே தமிழகத்தில் மறைந்து கிடக்கும் கலைத்திறமைகளை வெளிக்கொணரவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் குரலிசை, ஓவியம், பரதநாட்டியம், கிராமிய நடனம், கருவியிசை ஆகிய ஐவகைக் கலைகளில் 17 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளங்கலைஞர்களிடையே மாவட்ட அளவில் கலைப்போட்டிகள் நடத்தி, மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றவர்களிடையே மாநில அளவில் கலைப்போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கிடவும், இளையோர்களிடையே மாநில கலைவிழாவினை நடத்திடவும் 2021-2022 ஆம் ஆண்டில் அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டும், அதனைத் தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டும், 38 மாவட்டங்களில் முதற்கட்டமாக மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடத்தப்பட்டும், மாநில அளவிலான கலைப்போட்டிகள் நடத்திட தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநில அளவிலான கலைப்போட்டியின் போது, குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், கருவியிசை ஆகிய நான்கு வகைக் கலைகளில் 10 முதல் 15 கலைஞர்களைக் கொண்ட 17 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட கலைக்குழுக்களின் வாயிலாக 75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா (AZADI KA AMRIT MAHOTSAV) சுதந்திரத் போராட்டத்தை மையப் பொருளாகக் கொண்டு கலை நிகழ்ச்சிகளை 5 நிமிட வீடியோவாக தயாரித்து, அதனை YouTube-ல் பதிவேற்றம் செய்து அதன் Link விவரத்தினையும், குழுவின் முழுமையான விவரத்தினையும் கலை பண்பாட்டுத் துறைக்கு artandculture1991@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மற்றும் Whatsapp No.9150085001 என்ற எண்ணிற்கும் வீடியோ பதிவுகள் உள்ளிட்ட விவரங்களை 10.07.2022-க்குள் அனுப்பி வைத்திட இளையோர் கலைக்குழுக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கலைக்குழுக்களிடமிருந்து பெறப்படும் வீடியோக்கள் கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தெரிவுக்குழுவால் பார்வையிடப்பட்டு. தெரிவு செய்யப்படும் 12 சிறந்த கலைக்குழுக்களுக்கு மட்டும் மாநில அளவிலான கலைவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்திட வாய்ப்புகள் வழங்கப்படும். இளையோருக்கான மாநிலக் கலைப் போட்டியும், மாநில அளவிலான கலை விழாவும் ஒரே நாளில் நடத்தப்பெறும். இக்கலைக்குழுவினருக்கு மதிப்பூதியம், பயணச் செலவினம், சான்றிதழ் ஆகியன கலை பண்பாட்டுத்துறையால் வழங்கப்படும் என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews