தொடக்க கல்வி 2021-22 கல்வியாண்டிற்கான பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை 7 மற்றும் 8ம் தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். அதன்படி, இடைநிலை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் மாற வரும் ஜூலை 7ம் தேதி நடைபெறும். பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் மாற ஜூலை 8ம் தேதி நடைபெறும்.
மேலும், தொடக்க கல்வி 2021-2022 கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் விவரங்கள் கடந்த 21ம் தேதி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவரங்களை கொண்டே மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான முன்னுரிமை பட்டியல் இ.எம்.ஐ.எஸ் (EMIS) இணையதளத்தில் வெளியிடப்படும். எனவே ஆசிரியர்கள் விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதே படிவத்தில் திருத்தம் செய்து மீண்டும் அனுப்ப வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான முன்னுரிமை பட்டியல், எந்த பதவியில் மாறுதலுக்கு விண்ணப்பித்தாரோ அந்த பதவியில் முதன் முதலில் பணியில் சேர்ந்த நாள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் பிறந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும்.
بحث هذه المدونة الإلكترونية
الأحد، يونيو 26، 2022
Comments:0
Home
DEE
தொடக்க கல்வி 2021-22 கல்வியாண்டிற்கான பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 7, 8ல் பணி மாறுதல் கலந்தாய்வு: தொடக்க கல்வி துறை தகவல்
தொடக்க கல்வி 2021-22 கல்வியாண்டிற்கான பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 7, 8ல் பணி மாறுதல் கலந்தாய்வு: தொடக்க கல்வி துறை தகவல்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.