G.O.(Ms) No.11 Dt: May 27, 2022 - மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டங்களின் மூலம் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியினை பாதித்தொகை ரொக்கமாகவும் மீதமுள்ள தொகையினை தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கும் முறையினை மாற்றி முழுத்தொகையையும் ரொக்கமாக வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، مايو 27، 2022

Comments:0

G.O.(Ms) No.11 Dt: May 27, 2022 - மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டங்களின் மூலம் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியினை பாதித்தொகை ரொக்கமாகவும் மீதமுள்ள தொகையினை தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கும் முறையினை மாற்றி முழுத்தொகையையும் ரொக்கமாக வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை -

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி திட்டங்களின் மூலம் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியினை பாதித்தொகை ரொக்கமாகவும் மீதமுள்ள தொகையினை தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கும் முறையினை மாற்றி முழுத்தொகையையும் ரொக்கமாக வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2)த் துறை

அரசாணை (நிலை) எண்.11

நாள்: 27.05.2022

சுபகிருது, வைகாசி 13,

திருவள்ளுவர் ஆண்டு, 2053.

படிக்கப்பட்டது:

1. அரசாணை (நிலை) எண்.24, மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2.1)த் துறை, நாள் 26.06.2011.

2. அரசாணை (நிலை) எண்.13, மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2.1)த் துறை, நாள் 04.05.2018.

3. அரசாணை (நிலை) எண்.31, மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2.2)த் துறை, நாள் 01.08.2018.

4. மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கடித ந.க. எண்.5340/மாதிந-21/2021, நாள் 22.04.2022.

****** ஆணை:-

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு திருமண நிதியுதவி வழங்கும் திட்டங்களின் கீழ் பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவித் தொகை ரூ.25,000/-லிருந்து ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) உயர்த்தி வழங்கவும் இதனுடன் மணப்பெண்ணிற்கு ஒரு திருமாங்கல்யம் செய்ய நான்கு கிராம் தங்கம் (1/2 சவரன்) 22 காரட் இலவசமாக வழங்க ஆணையிடப்பட்டதுடன் வழங்கப்படவிருக்கும் திருமண உதவித்தொகை ரூ.50,000/-ல் ரூ.25,000/- ரொக்கப் பணமாகவும், மீதமுள்ள ரூ.25,000/-னை தேசிய சேமிப்பு பத்திரமாக வழங்கவும் அரசால் ஆணையிடப்பட்டது. மேலும், இச்சலுகை ஒரு குடும்பத்தில் ஒரு பெண் பயனாளிக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையினை பின்பற்றுமாறு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அறிவுறுத்தப்பட்டார்.

2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், 2018-2019 ஆம் நிதியாண்டு முதல், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத் திட்டங்களில் சுமார் 52 நலத் திட்டங்களை வரவு-செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டிற்குள் செலவினம் மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநருக்கு அதிகார பகிர்வு (Delegation of Power)மாற்றுத்திறனாளிகள் நலத் துறை - மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி திட்டங்களின் மூலம் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியினை பாதித்தொகை ரொக்கமாகவும் மீதமுள்ள தொகையினை தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கும் முறையினை மாற்றி முழுத்தொகையையும் ரொக்கமாக வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2)த் துறை அரசாணை (நிலை) எண்.11

நாள்: 27.05.2022

சுபகிருது, வைகாசி 13,

திருவள்ளுவர் ஆண்டு, 2053.

படிக்கப்பட்டது:

1. அரசாணை (நிலை) எண்.24, மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2.1)த் துறை, நாள் 26.06.2011.

2. அரசாணை (நிலை) எண்.13, மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2.1)த் துறை, நாள் 04.05.2018.

3. அரசாணை (நிலை) எண்.31, மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2.2)த் துறை, நாள் 01.08.2018.

4. மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கடித ந.க. எண்.5340/மாதிந-21/2021, நாள் 22.04.2022. ****** ஆணை:- மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு திருமண நிதியுதவி வழங்கும் திட்டங்களின் கீழ் பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவித் தொகை ரூ.25,000/-லிருந்து ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) உயர்த்தி வழங்கவும் இதனுடன் மணப்பெண்ணிற்கு ஒரு திருமாங்கல்யம் செய்ய நான்கு கிராம் தங்கம் (1/2 சவரன்) 22 காரட் இலவசமாக வழங்க ஆணையிடப்பட்டதுடன் வழங்கப்படவிருக்கும் திருமண உதவித்தொகை ரூ.50,000/-ல் ரூ.25,000/- ரொக்கப் பணமாகவும், மீதமுள்ள ரூ.25,000/-னை தேசிய சேமிப்பு பத்திரமாக வழங்கவும் அரசால் ஆணையிடப்பட்டது. மேலும், இச்சலுகை ஒரு குடும்பத்தில் ஒரு பெண் பயனாளிக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையினை பின்பற்றுமாறு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அறிவுறுத்தப்பட்டார்.

2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், 2018-2019 ஆம் நிதியாண்டு முதல், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத் திட்டங்களில் சுமார் 52 நலத் திட்டங்களை வரவு-செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டிற்குள் செலவினம் மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநருக்கு அதிகார பகிர்வு (Delegation of Power) வழங்கி ஆணையிடப்பட்டது. அவ்வரசாணையின் பத்தி 2(i) (3)-ல் திருமண உதவித்திட்டம் இடம் பெற்றுள்ளது.

3. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், 4 வகையான திருமண உதவித் திட்டத்தினை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016- ன் பிரிவு 2(zc)-ல் தெரிவிக்கப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தி ஆணையிடப்பட்டது. 4. 2022-2023 ஆம் நிதியாண்டிற்கான மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 21.04.2022 அன்று சட்டமன்றப் பேரவையில் இன்னபிறவற்றுடன், கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்:- "மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டத்தின் மூலம் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியினை பாதித்தொகை ரொக்கமாகவும் மீதமுள்ள தொகையினை தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கும் முறையினை மாற்றி முழுத்தொகையையும் ரொக்கமாக வழங்கப்படும்."

5. மேலே நான்காவதாக படிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கடிதத்தில், 2104.2022 அன்று சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பான மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டத்தின் மூலம் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியினை பாதித்தொகை ரொக்கமாகவும் மீதமுள்ள தொகையினை தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கும் முறையினை மாற்றி முழுத்தொகையையும் ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டதனை தொடர்ந்து, மாவட்ட அளவில் இத்திட்டத்தினை செயல்படுத்திட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களை திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் தங்க நாணயம் மற்றும் நிதி உதவித்தொகையினை தேசிய சேமிப்பு பத்திரமாக அல்லாமல் முழுத்தொகையையும் ரொக்கமாக வழங்கிட உரிய அரசாணை வழங்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். 6. மாற்றுத்திறனாளிள் நல இயக்குநரின் கருத்துருவினை நன்கு பரிசீலினை செய்த அரசு அதனை ஏற்று, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டங்களின் கீழ் பட்டயபடிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50,000/- மற்றும் ஏனைய மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.25,000/- என வழங்கப்பட்டு வந்த திருமண உதவித் தொகையில் 50% ரொக்கமாகவும் மீதமுள்ள 50% தொகையினை தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்பட்டு வந்த நடைமுறைக்கு பதிலாக பயனாளிகளுக்கு முழு தொகையையும் ரொக்கமாக வழங்கிட அரசு ஆணையிடுகிறது. 7. இவ்வாணை நிதித்துறையின் அ.சா. எண்.26367/நிதி(சந)/2022, நாள் 26.05.2022-ன்படி வெளியிடப்படுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

ஆர்.லால்வேனா,

அரசு செயலாளர்.

பெறுநர்

மாண்புமிகு முதலமைச்சர் அலுவலகம், சென்னை.9.

மாண்புமிகு அமைச்சர் (நிதி மற்றும் ம.வ.மே.) அலுவலகம், சென்னை-9,

மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர், சென்னை-5.

சம்பளக் கணக்கு அலுவலகம், சென்னை-9/35.

CLICK HERE TO DOWNLOAD

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة