12 ஆம் வகுப்பு என்பது நுழைவுத் தேர்வுக்கான தகுதித் தேர்வு அல்ல; சியுஇடி தேர்வை திரும்பப் பெறுவீர்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 04, 2022

Comments:0

12 ஆம் வகுப்பு என்பது நுழைவுத் தேர்வுக்கான தகுதித் தேர்வு அல்ல; சியுஇடி தேர்வை திரும்பப் பெறுவீர்!

"If the CUET allows the entrance test, the score of 12 will not be valid. Class 12 will be like a qualifying test for the entrance test. This will severely affect the poor, simple and rural students. Therefore, action should be taken to withdraw the entrance notice immediately," the AIADMK coordinator said. O. Panneerselvam insisted.

In a statement, he said, "The Union Ministry of Education has announced that the entrance examination for admission to courses in Central Universities will be held from the academic year 2022-2023, in the face of the inability to cancel the NEED examination for medical admissions, which has caused great dissatisfaction among students, parents and academics. Has caused.

Variety in 45 Central Universities across India and its affiliated colleges In order to fill the 1.8 lakh seats for undergraduate and postgraduate courses, the Central University Eligibility Test (CUET) CEET examination will be conducted from the academic year 2022-2023. The Central Ministry of Education has stated that the news has come in the press. Although the DMK government has objected to the examination being conducted on the basis of the National Education Policy, it has been reported that the registration for the entrance examination has begun and applications for the entrance examination can be submitted till the 30th of this month and the examination will be conducted in 13 languages, including Tamil. This confirms that admission to Central Universities and its affiliated colleges is through entrance examinations.

If this situation continues, I would like to inform you that in the future, admission to undergraduate and postgraduate courses in all universities and its affiliated colleges may become compulsory and there will be no value for the marks obtained in Class XII. Also, Class XII will be like a qualifying exam for the entrance exam. Poor, simple, rural students will be severely affected by this.

The DMK government should immediately take the necessary constructive steps to withdraw this entrance test without nominally objecting to it. The DMK has the responsibility to pinch this on the bud. The government has. Poor, simple rural student, students are currently suffering due to the tail wagging left in the NEET exam. Apart from that, in the case of this entrance examination, keeping in mind that this is the right moment, DMK will take necessary steps to withdraw the entrance examination notice without delay. There is an expectation among students, alumni and academics that the government should take over.

Therefore, I urge the Chief Minister to bring this issue to the notice of the Central Government immediately, to put the necessary pressure on it and to take immediate action to withdraw the entrance examination notice. ” "சியுஇடி நுழைவுத் தேர்வை அனுமதித்தால் 12 ஆம் மதிப்பெண்ணிற்கு மதிப்பு இருக்காது. 12 ஆம் வகுப்பு என்பது நுழைவுத் தேர்விற்கான ஒரு தகுதித் தேர்வு போல் ஆகிவிடும். இதன் மூலம் ஏழை, எளிய, கிராமப்புற மாணவ மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுவர். ஆகையால், நுழைவுத் தேர்வு அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான நீட் தேர்வினை ரத்து செய்ய இயலாமல் போராடிக் கொண்டிருக்கின்ற நிலைமையில், 2022-2023 ஆம் கல்வி ஆண்டிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது மாணவ, மாணவியர், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இருக்கின்ற பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான 1.8 இலட்சம் இருக்கைகளை நிரப்ப ஏதுவாக, 2022-2023 ஆம் கல்வியாண்டிலிருந்து மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, அதாவது Central University Eligibility Test (CUET) சியுஇடி தேர்வு நடத்தப்படும் என்றும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வினை எழுதத் தகுதியுடையவர்கள் என்றும், பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணிற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் தரப்படாது என்றும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கு திம.க அரசு எதிர்ப்புத் தெரிவித்து இருந்தாலும், நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிவிட்டதாகவும், நுழைவுத் தேர்வுக்கு இந்த மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இந்தத் தேர்வு தமிழ் மொழி உட்பட 13 மொழிகளில் கணினி வழியில் நடத்தப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன. இதிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால், வருங்காலங்களில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகக்கூடும் என்பதோடு மட்டுமல்லாமல் பன்னிரெண்டாம் வகுப்பில் பெறும் மதிப்பெண்ணிற்கு ஒரு மதிப்பு இருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு என்பது நுழைவுத் தேர்விற்கான ஒரு தகுதித் தேர்வு போல் ஆகிவிடும். இதன் மூலம் ஏழை, எளிய, கிராமப்புற மாணவ மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த நுழைவுத் தேர்வுக்கு பெயரளவில் எதிர்ப்புத் தெரிவிக்காமல், இதனை திரும்பப் பெறத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு தி.மு.க. அரசுக்கு உண்டு. நீட் தேர்வில் தும்பை விட்டு வாலைப் பிடித்ததன் காரணமாக ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தற்போது அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல் அல்லாமல், இந்த நுழைவுத் தேர்வு விஷயத்திலாவது, இதுதான் சரியான தருணம் என்பதை மனதில் நிலைநிறுத்தி, காலந்தாழ்த்தாமல் நுழைவுத் தேர்வு அறிவிப்பினை திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை திமுக. அரசு எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே உள்ளது.

எனவே, முதல்வர் அவர்கள் இந்தப் பிரச்சனையை மத்திய அரசின் கவனத்திற்கு உடனடியாக எடுத்துச் சென்று, தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, நுழைவுத் தேர்வு அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews