ஆசிரியர் - மாணவர் இடையேயான புரிதல் இடைவெளியை அகற்ற திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 24, 2022

Comments:0

ஆசிரியர் - மாணவர் இடையேயான புரிதல் இடைவெளியை அகற்ற திட்டம்

வகுப்பறைகளில் ஆசிரியர்கள் - மாணவர் கள் இடையேயான புரிதல் இடைவெ ளியை அகற்றுவதற்கான புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒருங் கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்குநர் ஆர்.சுதன் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கணித அறி வியல் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அறி வியல் இயக்கம் சார்பில் உலக புத்தக தின விழா தரமணியில் நேற்று நடைபெற் றது. இவ் விழாவில் 7 கணித, அறிவியல் நூல்களை வெளியிட்டு ஆர்.சுதன் பேசி யதாவது:

தமிழக அரசு தற்போது செயல்படுத்தி வரும் 'இல்லம் தேடி கல்வி திட்டம், பள்ளிக்கல்வி வரலாற்றில் புத்தெழுச் சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வியை மக்கள் மயமாக்குவதற்கான திட்டத்தின் அடுத்தகட்டமாக, வகுப்பறை நடவடிக் கைகளை முழுமையாக ஜனநாயகப் படுத்த திட்டமிட்டுள்ளோம். இரண்டு பேர் உரையாடும்போது, அவர்கள் இருவருக் கும் இடையேயான புரிதல் சமஅளவில் இருந்தால்தான் அந்த உரையாடல் செழுமை பெறும். அதுபோலவே, பள்ளி வகுப்பறைகளிலும் ஆசிரியர்கள் - மா வர்கள் இடையேயான புரிதலில் உள்ள இடைவெளி அகற்றப்பட வேண்டும்.

மாணவர்கள் வெறுமனே தகவல்களை கேட்பவர்களாக அல்லாமல், பல்வேறு விதமான கேள்விகளை எழுப்புபவர்களாக திறன்கள் வளர்க்கப்பட வேண்டும்.மாண வர்கள் காதுகளால் மட்டும் தகவல்களைக் கேட்டு கற்காமல், எதையும் கைகளால் தொட்டு உணர்ந்து கற்கும் வகையில் திட் டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இத்த கைய பணிகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற பள்ளிக் கல்வித் துறை தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவுக்கு தலைமை வகித்த, கணித அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் வே.ரவீந்திரன் பேசும்போது, “சென்னை கணித அறிவியல் நிறுவனத்தின் 60-வது ஆண்டு விழாவின் ஒருபகுதியாக எளிய தமிழில் கணித, அறிவியல் நூல்களை வெளியிட்டு வருகிறோம்" என்றார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.சுப்ர மணி பேசும்போது, “1980-ல் தொடங்கப் பட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கடந்த 40 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதத்தில் பல்வேறு பணிகளைச்செய்து வருகிறது. குறிப்பாக 500-க்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களை வெளியிட்டுள் ளோம். எளிய தமிழில் அறிவியல் கருத்து களைப் பரப்பும்'துளிரி’மாத இதழை லட்சக் கணக்கான மாணவர்களின் கைகளில் கொண்டு சேர்த்துள்ளோம்” என்றார்.

கணித அறிவியல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆர்.ராமானுஜம் பேசும் போது, “கணித அறிவியல் நிறுவனம் போன்ற மிகப்பெரும் ஆய்வு நிறுவனங் களும், மக்களிடையே களப்பணி ஆற்றும் அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புக ளும் இணைந்து செயல்படும்போது, அறிவியல் பரப்பும் பணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்” என்றார்.

இவ்விழாவில் எம்.எஸ்.முகமது பாதுஷா, சி.ராமலிங்கம், ஹரீஷ், சுதாகர், மோகனா உள்ளிட்ட அறிவியல் இயக்க உ நிர்வாகிகள், எஸ்.விஸ்வநாத் உள்ளிட்ட கணித அறிவியல் நிறுவன விஞ்ஞானிகள் பங்கேற்றனர். முன்னதாக அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எம்.எஸ். ஸ்டீபன் நாதன் வரவேற்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ் ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews